Home
Mobile

Samsung-ன் புது சிங்கக்குட்டி.. 5ஜி, 5000mAh பேட்டரி, 50MP கேமரா, 6GB ரேம் உடன் புது போன்.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனமானது (ஒரே நேரத்தில் பல எண்ணிக்கையிலான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து) இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையை ஒரு கலக்கு கலக்கிய கையோடு மிகவும் பிரபலமான ஏ-சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி ஏ27 (Samsung Galaxy A27 5G) மாடலையும் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

இந்த ஸ்மார்ட்போன் தற்போது எப்சிசி சான்றிதழ் தளத்தில் அமெரிக்க மற்றும் க்ளோபல் வேரியண்ட்களில் வெளிவந்துள்ளது. இது, சாம்சங் நிறுவனம் மிக விரைவில் ஒரு பரந்த அளவிலான சர்வதேச வெளியீட்டிற்குத் தயாராகி வருவதை குறிக்கிறது. ஒரு ஸ்மார்ட்போன் சந்தைக்கு வருவதற்கு முன்பு, எப்சிசி சான்றிதழ் பெறுவது பெரும்பாலும் இறுதி ஒழுங்குமுறை தடைகளில் ஒன்றாக இருக்கும். இது கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு தொலைவில் இல்லை என்பதற்கான வலுவான அறிகுறியாகும்.

Samsung:-5ஜி, 5000mAh பேட்டரி, 50MP கேமரா, 6GB ரேம் உடன் புது போன்!

சாம்சங் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம், என்ன விலைக்கு வரும்? இது சாம்சங்கின் அடுத்த மலிவு விலை மிட்-ரேன்ஜ் வகை மாடலாக இருக்கும் மற்றும் கேலக்ஸி ஏ26-க்கு அடுத்தபடியாக வெளிவரும் மாடலாகவும் இருக்கும். தற்போது வரை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அம்சங்களையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சமீபத்திய லீக்ஸ் மற்றும் பெஞ்ச்மார்க் லிஸ்டிங்ஸ் வழியாக சில விவரங்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, கேலக்ஸி ஏ27 ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மற்றும் 6ஜிபி ரேம் உடன் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான, சாம்சங்கின் லேட்டஸ்ட் ஒன் யுஐ (One UI) சாஃப்ட்வேர் உடன் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காம்பினேஷன் - வழக்கமான பயன்பாட்டிற்கு நம்பகமான செயல்திறனை வழங்கும் என்பதை குறிக்கிறது.

கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போனின் டிசைன் ஆனது ஏற்கனவே உள்ள கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ57 மாடல்களை போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, நாட்ச் (notch) டிஸ்பிளேவிற்கு பதிலாக பன்ச்-ஹோல் (punch-hole) டிஸ்பிளே இருக்கும். இதன் டிஸ்பிளே, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த தகவல் உண்மையாக இருந்தால், இந்த பேனல் இந்த ஸ்மார்ட்போனை, அதன் பிரிவில் உள்ள சிறந்த டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களின் வரிசையில் வைக்கும். குறிப்பாக, மீடியாக்களை பார்ப்பது, சமூக ஊடகங்களை பார்ப்பது மற்றும் கேமிங்கிற்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி ப்ரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவுக்கு இந்த கேமரா அமைப்பு மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்தது தான்.

ஏனென்றால் மலிவு விலை மிட்-ரேன்ஜ் பிரிவில் உள்ள பெரும்பாலான போன்கள் டூயல் கேமரா செட்டப்பையே கொண்டுள்ளன, இது கேலக்ஸி ஏ27-க்கு ஒரு சாதகமாக இருக்கலாம். கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை, இது 5000mAh பேட்டரி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெறலாம். விலை ரூ.25,000 க்குள் (ரூ.21,999) இருக்கும்

கிஸ்பாட்டின் கருத்து: இதுவரை நமக்கு தெரிந்தவற்றின் அடிப்படையில் பார்த்தால், உங்கள் அன்றாட பயன்பாட்டிற்காக ஒரு நடுத்தர விலையிலான சாம்சங் ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், கேலக்ஸி ஏ27 மாடலின் அறிமுகத்திற்காக தாராளமாக காத்திருக்கலாம். சாம்சங்கின் சாஃப்ட்வேர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் நீண்ட கால ஓஎஸ் ஆதரவும் - பொதுவாகவே சாம்சங் ஸ்மார்ட்போன்களை ஒரு சிறந்த தேர்வாக ஆக்குகின்றன.

மேலும் சாம்சங்கின் ஏஐ (AI) அம்சங்களின் தொகுப்பும் மற்ற பிராண்டுகள் வழங்குவதை விட மிகவும் மேம்பட்டதாக உள்ளது. உங்களிடம் பழைய கேலக்ஸி ஏ சீரிஸ் போன் இருந்தால், ஏ27 மாடலின் சிப்செட் மற்றும் கேமராக்கள் இதை ஒரு மதிப்புமிக்க அப்கிரேட் ஆகவும் இருக்கும்!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A25 5G With Snapdragon 6 Gen 3 50MP Triple Camera 5000mAh Battery Launching Soon Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X