எல்லா பழைய TV-க்கும் டாட்டா.. OLED, QLED, மினி LED, UHD-னு பல புது Samsung டிவிகள் அறிமுகம்.. என்ன விலை?
தொடர்ந்து 20 ஆண்டுகளாக உலகளவில் நம்பர் 1 டிவி பிராண்டாக உள்ள சாம்சங் (Samsung) நிறுவனமானது, இந்தியாவில் அதன் 2026 விஷன் ஏஐ டிவி லைன்அப்பை (2026 Vision AI TV Lineup) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மைக்ரோ ஆர்ஜிபி, ஓஎல்இடி, நியோ க்யூஎல்இடி, தி ஃபிரேம், மினி எல்இடி மற்றும் யுஎச்டி என பல வகையான ஸ்மார்ட் டிவி மாடல்கள் அடங்கும்.
இந்த அறிமுகத்தின் மூலம், சாம்சங் தனது அனைத்து மாடல்களிலும் ஏஐ-பவர்டு அம்சங்களை (AI-powered features) விரிவுபடுத்துகிறது. மேலும் இதன்மூலம், இந்தியாவில் உள்ள அதிகமான நுகர்வோருக்கு மேம்பட்ட பிக்சர் (Smarter picture), சவுண்ட் மற்றும் பெர்சனலைஸ்டு வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை (Personalized viewing experiences) வழங்குகிறது.

சாம்சங்கின் 4கே மற்றும் அதற்கு மேற்பட்ட டிவி சீரீஸ் முழுவதும் விஷன் ஏஐ கம்பேனியன் (VAC) அம்சங்களின் இந்த விரிவாக்கம், டிவி அனுபவத்தின் மைய பகுதியாக ஏஐ-ஐ மாற்றுவதற்கான அந்த பிராண்டின் பரந்த உத்தியை பிரதிபலிக்கிறது. இந்த விரிவாக்கம், ஏஐ-ஆற்றல் பெற்ற பார்க்கும் அனுபவத்தை அதிகமான பிரிவுகள், திரை அளவுகள் மற்றும் நுகர்வோர் தேவைகளுக்குக் கொண்டு வருகிறது.
விஷன் ஏஐ கம்பேனியன் (Vision AI Companion - VAC) என்பது, பிக்ஸ்பி, பெர்பிளெக்சிட்டி மற்றும் மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Bixby, Perplexity and Microsoft Copilot) உள்ளிட்ட சாம்சங்கின் பரந்த அளவிலான ஏஐ சேவை தளங்களை ஒன்றிணைத்து, டிவி அனுபவத்தை மேலும் புத்திசாலித்தனமானதாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும் மாற்றுகிறது.
பயனர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு துணையாக செயல்பட வடிவமைக்கப்பட்ட சாம்சங்கின் விஷன் ஏஐ கம்பேனியன் ஆனது எதை பார்ப்பது, எதை சாப்பிடுவது மற்றும் எதை கேட்பது என்பதை பயனர்களுக்கு வழிகாட்ட உதவுகிறது. இதன் மூலம், ஸ்மார்ட்டிவியின் பங்கை வெறும் பார்வைக்கு அப்பாற்பட்டதாக சாம்சங் விரிவுபடுத்துகிறது. இந்த ஏஐ டிவி சீரீஸ் ஆனது - திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் கேமிங் ஆகியவற்றிற்கு ஏஐ-என்ஹான்ஸ்டு பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுவருகிறது.
விலை, சலுகைகள் மற்றும் விற்பனை: ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட டிவி மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ₹102990 மதிப்புள்ள ஒரு இலவச சவுண்ட்பார் (complimentary soundbar) மற்றும் ₹23990 மதிப்புள்ள ஒரு இலவச மியூசிக் ஸ்டுடியோவை (free Music Studio) பெறலாம் என்று சாம்சங் அறிவித்துள்ளது. கூடுதலாக, 20% வரை கேஷ்பேக் மற்றும் நெகிழ்வான இஎம்ஐ விருப்பங்களும் கூட கிடைக்கும்.
சாம்சங்கின் மைக்ரோ ஆர்ஜிபி மாடல்களின் (Samsung's Micro RGB range) விலை ரூ.1,24,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் ஓஎல்இடி மாடல்களின் (Samsung's OLED range) விலை ரூ.1,14,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் ஃபிரேம் டிவி மாடல்களின் (Samsung's Frame TV range ) விலை ரூ.56,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் நியோ க்யூஎல்இடி மாடல்களின் (Samsung's Neo QLED range) விலை ரூ.52,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் மினி எல்இடி மாடல்களின் (Samsung's Mini LED range) விலை ரூ.42,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் யுஎச்டி டிவி மாடல்களின் (Samsung's UHD TV range) விலை ரூ.36,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் 2026 மாடல் லைன்அப் ஆனது, ஏற்கனவே சாம்சங் சில்லறை விற்பனை கடைகள் (Samsung retail stores), அதிகாரப்பூர்வ சாம்சங்.காம் (Samsung.com) வலைத்தளம் மற்றும் முன்னணி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சில்லறை விற்பனை சேனல்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications