Home
Mobile

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Samsung Galaxy A23 5G போன் அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

 அட்டகாசமான கேமரா வசதி

அட்டகாசமான கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை
எடுக்க முடியும்.

பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல். குறிப்பாக இதன் கேமராக்களை விட சிப்செட் வசதி தான் இன்னும் அருமையாக உள்ளது.

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

தற்போது அறிமுகம் செய்யப்பட்டசாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியை கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு நீங்கள்மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன்மாடல்.

நிறங்கள்?

நிறங்கள்?

நீலம், வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

பின்பு 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், Geomagnetic சென்சார், கிரிப் சென்சார், விர்ச்சுவல் லைட்டிங் சென்சார் மற்றும் விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி?

கனெக்டிவிட்டி?

புளூடூத் 5.1, டூயல்-பேண்ட் வைஃபை, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ் போன்ற அசத்தலான கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் எடை 197 கிராம் என்று கூறப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை

விலை மற்றும் விற்பனை

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் ரூ.20,000-க்குள் விற்பனைக்கு வரும் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன்விற்பனை விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5ஜி சேவை

5ஜி சேவை

அதேபோல் 5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்று தான் கூறவேண்டும்.

மேலும் விவோ, ஒப்போ, மோட்டோ நிறுவனங்களும் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A23 5G with 5,000 mAh Battery Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X