டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

|

வேகமான நகர்ந்து செல்லும் உலகத்தில் பிரதான தேவையாக ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. ஒவ்வொரு தேவையிலும் ஸ்மார்ட்போன்கள் தலையீடு கண்டிப்பாக இருக்கிறது என்றே கூறலாம். ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் செய்வது என்பது மிக கட்டாயமாகும். இருப்பினும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வரைகூட அதை பயன்படுத்தாமல் பலராலும் காத்திருக்க முடியவில்லை என்றே கூறலாம். பலரும் தாங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை உறங்கச் செல்லும் போது இரவு முழுவதுமே சார்ஜ் செய்கிறார்கள். நேரத்தை அதிகநேரம் செலவிடாமல் சார்ஜ் செய்யும் வகையில் கிடைக்கும் சிறந்த அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

இந்தியாவில் வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய வசதியுடன் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை காணலாம். வேகமான சார்ஜிங் வசதியோடு வரும் முக்கிய சிறப்பம்சங்கள் கொண்ட சாதனமாக சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் இருக்கிறது. ஏணைய மிட் ரேஞ்ச் மற்றும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அதிவேக சார்ஜிங் ஆதரவோடுடனே வருகிறது. ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக இங்கே பார்க்கலாம்.

ஐக்யூ 7 அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஐக்யூ 7 அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் கிடைக்கும் மிக வேகமான சார்ஜ் அம்சங்களோடு கிடைக்கும் சாதனங்களில் ஒன்றாகும். விவோ துணை பிராண்டில் இருந்து வரும் இந்த சாதனம் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 18 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போன்

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போன்

சியோமி 11ஐ ஸ்மார்ட்போன் ஆனது ஹைப்பர் சார்ஜ் வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது பெயர் குறிப்பிடுவது போல் ஹைப்பர் சார்ஜ் வசதியைக் கொண்டிருக்கிறது. சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் சாதனமானது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. வெறும் 20 நிமிடங்களில் இந்த சாதனத்தை 100 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

சியோமி 11டி ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

சியோமி 11டி ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தை வெறும் 21 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

சியோமி எம்ஐ 10 அல்ட்ரா அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

சியோமி எம்ஐ 10 அல்ட்ரா அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

சியோமி எம்ஐ 10 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது சற்று பழைய மாடல் சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தை 21 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 9 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

வேகமாக சார்ஜ் செய்யும் டாப் 10 போன்களில் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனமும் அடங்கும். ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனமானது 65 வாட்ஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரோவடு வருகிறது. இந்த சாதனத்தில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 32 நிமிடங்களில் இந்த சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஒப்போ ரெனோ 6 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போனானது ப்ரீமியம் அம்சத்தோடு வரும் ஃபிளாக்ஷிப் சாதனமாகும். ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போனானது 65 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனத்தை 35 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனானது முதல் பத்து வேகமான சார்ஜிங் சாதனங்களில் ஒன்றாகும். இந்த ரியல்மி 65 வாட்ஸ் சூப்பர் டார்ட் ஃப்ளாஷ் சார்ஜருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் டாப் 10 அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்களில் பிரதானமாக இருக்கிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ 2020-ல் வெளியிடப்பட்ட சாதனமாகும். ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனானது 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4260 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனை 40 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

ஹூவாய் மேட் எக்ஸ்5 அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஹூவாய் மேட் எக்ஸ்5 அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஹூவாய் மேட் எக்ஸ்5 ஸ்மார்ட்போனானது 55 வாட்ஸ் சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் இன்னும் வேகமாக சார்ஜ் செய்யும் வகையிலான அடாப்டர் வசதியோடு வருகிறது.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ அதிவேக சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனானது டாப் 10 வேகமான சார்ஜிங் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை 40 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Here the List of Top 10 Fast Charging Smartphones in India 2022: SuperVOOC Fast charging, Warp Charging and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X