சாம்சங் பிக்ஸ்பி என்றால் என்ன? ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

சாம்சங் நிறுவனத்தின் சொந்த டிஜிட்டல் அசிஸ்டெண்ட் பிக்ஸ்பி நிச்சயம் அந்நிறுவனத்திற்கு இழந்த பெயரை மீட்டு கொடுக்கும்

By Siva
|

சாம்சங் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு ஒரு சோதனையான ஆண்டாக அமைந்தாலும், இந்த ஆண்டு இழந்த பெயரையும், மதிப்பையும், நஷ்டத்தையும் ஈடுகட்டும் வகையில் பல அதிரடி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சாம்சங் பிக்ஸ்பி என்றால் என்ன? ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவ

அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் வெளிவரவுள்ள சாம்சங் கேலக்ஸி S8 மாடல் நிச்சயம் அந்நிறுவனத்திற்கு இழந்த பெயரை மீட்டு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமிரா செட் அப், பேட்டரி, ஸ்டோரேஜ் கெப்பச்சிட்டி மற்றும் பல அம்சங்கல் ஆச்சரியத்தக்க வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் யாரும் எதிர்பாராத இன்னொரு அம்சமான பிக்ஸ்பி (Bixby) என்ற தனிச்சிறப்பு மிக்க வசதியும் கொண்டது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் பிக்ஸ்பி என்றால் என்ன? ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவ

பிக்ஸ்பி என்ற சாம்சங் நிறுவனத்தின் சொந்த டிஜிட்டல் அசிஸ்டெண்ட் வேறு ஒன்றும் இல்லை, ஆப்பிள் ஐபோனின் சிறி போலவும் கூகுளின் கூகுள் அசிஸ்டெண்ட் போலவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்புங்கள், இவைகள் தான் கூகுள் தேடலில் டாப் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் பிக்ஸ்பி என்பது சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனில் இரண்டு விதத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது என்று வதந்திகள் பரவி வருகின்றன.

சாம்சங் பிக்ஸ்பி என்றால் என்ன? ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவ

ஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் போன் உபயோகிப்பவர்களுக்கு கண்டிப்பாக சிறி மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் குறித்து தெரிந்திருக்கும். இந்த வசதி தற்போது சாம்சங் போனிலும் வருகிறது என்றால் நமக்கு ஒரு பெர்சனல் அசிஸ்டெண்ட்டை சாம்சங் நமக்கு போனுடன் இலவசமாக தருகிறது என்றே எடுத்துக் கொள்ளலாம்.

ப்ளிப்கார்ட்டின் குடியரசு தின சிறப்பு விற்பனை, என்னென்ன வாங்கலாம்.?

சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனுடனே இந்த ஆப்ஸ் உள்ளடங்கி இருப்பதால் இதை தனியாக ஆக்டிவேட் செய்வதில் எந்தவித சிரமமும் இருக்காது. மற்ற சாம்சங் ஆப்ஸ்களை போலவே இந்த ஆப்ஸ்-ஐயும் பயன்படுத்தலாம்.

மேலும் ஆப்பிள் ஐபோனுக்கு சிறி வசதியை செய்து கொடுத்த Viv லேப்ஸ்தான் சாம்சங் நிறுவனத்திற்கும் பிக்ஸ்பி வசதியை செய்து கொடுத்துள்ளது என்பதால் ஆப்பிள் ஐபோனில் உள்ள தரம் நிச்சயம் இந்த பிக்ஸ்பியிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் Viv லேப்ஸ் இடம் இருந்து இந்த வசதியை பெற்று சாம்சங் டெக்னீஷியன்களும் இதில் புதிய அதிநவீன டெக்னாலஜியை புகுத்தியிருப்பதால் ஆப்பிள் சிறியை விட இது மேலானது என்று சொல்லலாம் என்ற வதந்தியும் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.

ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தின் ஒருசில மாடல்கள் எஸ் வாய்ஸ் என்ற வசதி இருக்கின்றது என்பது வாடிக்கையாளர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த எஸ் வாய்ஸ் வசதிக்கும் பிக்ஸ்பி வசதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் என்று கேட்டால், எஸ் வாய்ஸை விட இந்த பிக்ஸ்பி அட்வான்ஸ் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் என்பது மட்டும் இப்போதைக்கு தகவல் வெளிவந்துள்ளது.

இந்த பிக்ஸ்பி ஆப்ஸ், கூகுள் போட்டோஸ் மற்றும் ஆப்பிள் போட்டோஸ் ஆப்ஸ்களுக்கு இணையானது என்றும், சாம்சங் நிறுவனத்தின் எஸ் வாய்ஸ், பிக்ஸ்பி பிரபலமானதும் நிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 to features its very own AI assistant - Bixby. Read for more details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X