Home
Mobile

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஏன் ரூட் செய்ய வேண்டும்.? (காரணங்கள்)

ரூட் என்பது ஒப்பன் செய்ய முடியாத ஒருசில அப்ளிகேசனை ஓப்பன் செய்ய வைப்பது.

By Siva

பொதுவாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ரூட் என்ற வார்த்தை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஒருவேளை தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். ரூட் என்பது ஒப்பன் செய்ய முடியாத ஒருசில அப்ளிகேசனை ஓப்பன் செய்ய வைப்பது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஏன் ரூட் செய்ய வேண்டும்.? (காரணங்கள்)

உங்கள் ஆண்ட்ராய்டு போன் ரூட் செய்யப்பட்டால் இதற்கு முன்னர் உங்களுக்கு கிடைக்காத பல எளிய வழிகள், சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க கூகுள் சுந்தர் பிச்சை செய்யும் 8 முயற்சிகள்

ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் ரூட்கள் பல உள்ளன. இந்த ரூட்கள் ஏதோ ஒரே ஒரு சைஸில் கிடைப்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் உங்கள் போனை ரூட் செய்யும் முன் ஒருசில விஷயங்களை குறிப்பாக கவனித்து கொள்ள வேண்டும்.

டூயல் கேமிரா லென்ஸ் ஸ்மார்ட்போன்கள் டிரெண்ட் ஆவது ஏன் தெரியுமா?

ஒரு முக்கியமான விஷயம் உங்கள் ஸ்மார்ட்போன் ரூட் செய்யப்பட்டா, அந்த போனுக்குரிய வாரண்டியை இழக்க வேண்டிய நிலை நேரிடும். இதற்கு ஓகே என்றால் நீங்கள் ரூட்டை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம்

பிளாட்வேரை டெலிட் செய்யுங்கள் (bloatware)

பிளாட்வேரை டெலிட் செய்யுங்கள் (bloatware)

நீங்கள் ஒரு மொபைல் போனை வாங்கும்போது அதில் பிளாட்வேர் என்று கூறப்படும் ஆப்ஸ்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த பிளாட்வேர் ஆப்ஸ்கள் ஒருசிலருக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். வெகு பலருக்கு இந்த பிளாட்வேர் ஆப்ஸ்கள் இடத்தை அடைத்து கொண்டு இருக்கும் என்பதே உண்மை. இதனால் எந்த பலனும் இருக்காது.

எனவே இவ்வாறு பயனில்லாத நிலையில் இந்த பிளாட்வேரை டெலிட் செய்வது ரூட்டின் ஒரு வகை. இந்த பிளாட்வேரை டெலிட் செய்த பின்னர் உங்களுக்கு அதிகப்படியாக ஸ்பேஸ் கிடைக்கும் என்பது உறுதி

பேட்டரி லைஃப் அதிகரிக்கும்;

பேட்டரி லைஃப் அதிகரிக்கும்;

பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஏற்படும் பிரச்சனை பேட்டரி லைஃப் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது. பேட்டரி லைஃபை அதிகரிக்க பல செயலிகள் நடைமுறையில் இருந்தாலும், இதற்கு ஒரு சிறந்த வழி, போனை ரூட் செய்வதுதான். ரூட் செய்த பின் உங்களுடைய பேட்டரி லைஃப் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்திருப்பதை உணரலாம்

பேக்கப் மிக அவசியம்:

பேக்கப் மிக அவசியம்:

ஒரு ஸ்மார்ட்போனை ரூட் செய்வதற்கு முன்னர் பேக்கப் என்பது மிக அவசியமான ஒன்று. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய ஆப்ஸ்கள், டேட்டாக்கள் ஆகியவற்றை பேக்கப் செய்த பின்னர் ரூட்டுக்கு ஓகே செய்யுங்கள். ஒருவேளை ரூட் செய்யும்போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் போனை ரீஸ்டோர் செய்துவிட்டால் முந்தைய நிலையை அடையலாம்

பிராஸசரை ஓவர்க்ளாக் செய்ய வேண்டும்

பிராஸசரை ஓவர்க்ளாக் செய்ய வேண்டும்

ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள கிளாக் அலைகள் மிக அதிகமாக இருந்தால் அந்த ஸ்மார்ட்போன் வெப்பம் அதிகமாவதற்கும், பேட்டரி குறைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. எனவே ரூட் மூலம் இந்த க்ளாக் அலைகளை குறைத்தால் உங்கள் போனின் பேட்டரி மிச்சப்படுத்தப்படுவதோடு, போன் வெப்பம் அதிகமாவதில் இருந்தும் தப்பிக்கின்றது

டெலிட் செய்த போட்டோக்களை திரும்ப பெறலாம்

டெலிட் செய்த போட்டோக்களை திரும்ப பெறலாம்

ஸ்மார்ட்போனை ரூட் செய்தல் மூலம் நமக்கு கிடைக்கும் இன்னொரு அபாரமான வசதி தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாம் டெலிட் செய்த புகைப்படங்களை மீண்டும் பெறலாம். ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்த புகைப்படங்களை மீண்டும் பெற சந்தையில் எத்தனையோ செயலிகள் இருந்தாலும் இதன் மூலம் இழந்த புகைப்படங்களை பெறுவது பாதுகாப்பானது மட்டுமின்றி இழந்த மெமரிகளை மீண்டும் பெறலாம்

கஸ்டம் ROMஐ இன்ஸ்டால் செய்யுங்கள்:

கஸ்டம் ROMஐ இன்ஸ்டால் செய்யுங்கள்:

ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பாளர்கள் கஸ்டம் ROMஐ இன்ஸ்டால் செய்வது அவசியமாக கருதப்படுகிறது. இதுவும் ரூட்டின் ஒரு அம்சம்தான். ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வமான ஓஎஸ் செயல்படாத நேரத்தில் இந்த ROMஐ மிகவும் உபயோகமாக இருக்கும்

ஸ்டோரேஜை அதிகரிக்க உதவும்:

ஸ்டோரேஜை அதிகரிக்க உதவும்:

ஒரு ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜை அதிகரிக்க வேண்டும் என்றால் உடனே அனைவரும் செய்வது அதிக GB உள்ள எஸ்.டி கார்டை வாங்கி பொருத்துவது. ஆனால் அனைத்து ஸ்மார்ட்போன்களும் அதிகளவு GB உள்ள எஸ்டி கார்டுக்கு சப்போர்ட் செய்யாது.

இதுமாதிரியான நேரத்தில் ரூட்டை உபயோகித்தால் உங்கள் ஸ்மார்ட்போன் அதிக ஸ்டோரேஜ் வசதியை பெறும். அதன்பின்னர் நீங்கள் அதிகளவிலான டேட்டாக்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
If you are confused that you should root your Android smartphone or not, these reasons will convince you to do so.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X