புதிய விருந்தாளியாக பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
புதிய விருந்தாளியாக பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்!

பிரசித்தி பெற்ற மாடலான கர்வ்-9320 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுவதாக அறிவித்து இருந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் மே மாதமே வெளியிடப்பட்டுள்ளது.

இப்போது அந்த கர்வ்-9320 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது பிளாக்பெர்ரி. இந்த ஸ்மார்ட்போனின் விலையை தெரிந்து கொள்ளவதற்கும் முன்பு இதன் தொழில் நுட்பங்களை பற்றி பார்ப்போம்.

103 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான கியூவர்ட்டி கீப்பேட் வடிவமைப்பினை கொண்டது. 3.2 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங்கையும் அள்ளி தெளிக்கும்.

4 X டிஜிட்டல் சூம் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா வழங்கும். கர்வ்-9320 ஸ்மார்ட்பன் 7.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும்.

வைபை வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன், 1,450 எம்ஏஎச் பேட்டரியில் கலக்கும். இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

இதன் மைக்ரோ எஸ்டி கார்டு 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள எளிதாக துணை புரியும்.

இதில் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 18 நாட்கள் ஸ்டான்ட்-பை டைம் வசதியினை வழங்கும்.

3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த கர்வ்-9320 ஸ்மார்ட்போனை ரூ.15,990 விலையில் பெறலாம். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,000 விலை கொண்டதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது எதிர்பார்த்த விலையையும் விட அதிகமான விலையை கொண்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்