இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்!

புதிய கர்வ்-9320 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் வருகிற ஜூன் மாதம் வெளியிட இருப்பதாக பிளாக்பெர்ரி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
பிளாக்பெர்ரி போல்டு-9900 ஸ்மார்ட்போனை போல, இந்த பிளாக்பெர்ரி கர்வ்-9320 ஸ்மார்ட்போன் மாடலும் சிறப்பான வசதிகளை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி 7.1 ஆப்பேரட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 2.44 இஞ்ச் திரையில் மூலம் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3.2 மெகா பிக்ஸலில் கண்ணை கவரும் புகைப்படங்களை அள்ளி தெளிக்கும். ஸ்டீரியோ எப்எம் ரேடியோ, மீடியா ப்ளேயர் மட்டும் அன்றி வைபை தொழில் நுட்ப வசதியிலும் அசத்தும். 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் பயன்படுகின்றது.
இது போன்ற இன்னும் பல அரிய வசதிகளை வழங்க இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை வருகிற ஜூன் மாதம் இந்தியாவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ள பிளாக்பெர்ரி நிறுவனம் இதன் விலை விவரத்தினை தெளிவாக கொடுத்துள்ளது. இந்த கர்வ்-9320 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.12,000 விலையில் பெறலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications