இதான்டா ஆபரு.. ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிருது! Motorola போன் வாங்கினால் Moto Buds+ இலவசம்.. ரூ.30000 டிஸ்கவுண்ட்!
கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் கிளாம்ஷெல் ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு நடக்கும் ஒரு சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக.. "இதுவரை கிடைக்காத அளவிலான மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
என்ன மாடல்? அது மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.99,999 ஆகும். தற்போது இது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ் (Reliance Digital Stores) வழியாக ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஆபர் விலை ஜனவரி 26 அன்று (அதாவது 2025 குடியரசு தினத்தோடு) முடிவடையும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரூ,30,000 நேரடி தள்ளுபடி மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ.6,999 மதிப்புள்ள மோட்டோ பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ் இலவசமாக கிடைக்கும். மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மிட்நைட் ப்ளூ, ஸ்பிரிங் கிரீன் மற்றும் பீச் ஃபஸ் ஆகிய கலர்களில் விற்கப்படுகிறது.
இந்த விற்பனையின் போது, மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி,பிஓபி கார்டு மற்றும் ஃபெடரல் வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.67,499 க்கு கொண்டுவர முடியும்.
மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 413பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கவர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட4-இன்ச் எல்டிபிஓ பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது!
சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டில் இயங்குகிறது, இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் அவுட்டர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் 4000mAh பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இருப்பினும் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் 68W சார்ஜரை அனுப்புகிறது.
இதேபோல ஜனவரி 27 ஆம் தேதி வரை, அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஃபேப் போன் ஃபெஸ்ட் என்கிற தள்ளுபடி விற்பனையும் நடக்கிறது. இதன்கீழ் ஒன்பிளஸ் தொடங்கி ஐடெல் வரையிலாக பல நிறுவனங்களின் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது என்கிற கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








