இனி Redmi ராஜ்ஜியம்.. புது 5ஜி போன்.. 185Hz டிஸ்பிளே, 200MP கேமரா, 8500mAh பேட்டரி, 100W சார்ஜிங், IP69!
9000mAh பேட்டரி உடனான ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) மற்றும் 8000mAh பேட்டரி உடனான ரெட்மி நோட் 17 (Redmi Note 17) ஆகிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த கையோடு, ரெட்மி நிறுவனம் 8500mAh பேட்டரி உடனான இன்னொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
அது ரெட்மி கே100 ப்ரோ (Redmi K100 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station - DCS) வழியாக இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (டிஸ்பிளே, சிப்செட், கேமரா, பேட்டரி) வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் ரெட்மி கே100 ப்ரோவாக அறிமுகமாகும் மாடல் இந்தியா உட்பட மற்ற சந்தைகளில் போக்கோ எப்9 அல்ட்ரா (POCO F9 Ultra) மாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், என்னை பொறுத்தவரை ரெட்மி கே100 ஸ்மார்ட்போனின் மீது இந்திய வாடிக்கையாளர்கள் இரு கண் வைப்பதிலும், இது தொடர்பான அப்டேட்களை ஃபாலோ செய்வதிலும் எந்த தவறும் இல்லை.
இன்னொரு லேட்டஸ்ட் அப்டேட் - சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 17 ஆனது இந்திய சந்தையில் வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. சரி வாருங்கள்.. ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பற்றி பார்ப்போம்; பின்னர் ரெட்மி நோட் 17 மாடலின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
ரெட்மி கே100 ப்ரோ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 185Hz எனும் மிக அதிக ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) ஆதரிக்கும் பிளாட் டிஸ்பிளே
- அல்ட்ரா-ஹை ரெசல்யூஷன் (ultra-high resolution) கொண்ட டிஸ்பிளே தொழில்நுட்பம்
- 6.59-இன்ச் அல்லது 6.9-இன்ச் OLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்
- பெரிய சென்சார் கொண்ட 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- மேக்ரோ படங்களையும் ஆதரிக்கும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 8,500mAh திறன் கொண்ட பேட்டரி
- 100W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி
- சிமெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள்
- ஸ்க்ரீனுக்கு அடியில் செயல்படும் 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் புகாத தன்மைக்கான IP68 / IP69 தரச்சான்று
ரெட்மி கே100 ப்ரோ எப்போது அறிமுகமாகும்? ரெட்மி கே100 ப்ரோ மாடலை உள்ளடக்கிய ரெட்மி கே100 சீரீஸ் (Redmi K100 Series) ஆனது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இதன் உலகளாவிய பதிப்பு (global variant) பின்னர் வேறு பெயரில் வெளியாகலாம்.
ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: சீனாவில், இந்த ஸ்மார்ட்போனின் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.18,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.20,000 க்கும், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.23,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- Android 16 அடிப்படையிலான HyperOS 3
- டூயல் சிம் ஆதரவு
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7-இன்ச் Full-HD+ OLED டிஸ்பிளே
- ஈரமான விரல்களிலும் சிறப்பாக செயல்படும் Wet Touch 2.0 தொழில்நுட்பம்
- தூசி மற்றும் நீர் புகாத பாதுகாப்பிற்கான IP65 ரேட்டிங்
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட்
- Adreno GPU, 8GB வரையிலான LPDDR4x ரேம்
- 256GB வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ்
- டிஸ்பிளேவிற்கு உள்ளேயே அமைந்த ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் (face unlock) வசதி
- எப்/1.8 அப்பர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- எப்/2.0 அப்பர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 1080p/30 fps தரத்தில் வீடியோ பதிவு
- 8,000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி
- 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, Bluetooth 5.1, USB Type-C போர்ட், GPS, GLONASS மற்றும் Galileo
- அளவீட்டில் 169.7x79.14x8.26 மிமீ
- எடையில் 225 கிராம்
OPINION: என்னை பொறுத்தவரை ரூ.20,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற யோசனையில் உள்ளவர்கள், ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 17 மாடலுக்காக காத்திருக்கலாம். இதோடு அறிமுகமான ப்ரோ வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. ஆக இப்போதைக்கு ஸ்டாண்டர்ட் மாடல் மீது மட்டுமே கவனம் செலுத்துமாறு பரிந்துரைக்கிறேன்.
ஒருவேளை நீங்கள் பிளாக்ஷிப் அல்லது ப்ரீமியம் பிரிவின் கீழ் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால், ரெட்மி கே100 ப்ரோ மாடலின் சீன அறிமுகத்தை தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் போக்கோ எப்9 அல்ட்ரா மாடலின் இந்திய அறிமுகத்திற்காக காத்திருக்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி இது ரெட்மி கே100 ப்ரோவின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக, அதாவது கிட்டத்தட்ட ஒரே அம்சங்களுடன் வேறு மாடல் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications