மீண்டும் மீண்டும்-ஆ.. 9000mAh பேட்டரி POCO 5ஜி போன் மீது ரூ.4000 விலை உயர்வு.. மேலும் 2 மாடல்கள் Price Hike!
போக்கோ (POCO) நிறுவனமானது அமைதியான முறையில் அதன் 3 ஸ்மார்ட்போன்களின் விலைகளை மீண்டும் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே இந்த போன்களின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ரூ.2,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளவர்களுக்கு இது சற்று கசப்பான தகவலாக தோன்றினாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதற்கு ஏற்கனவே பழகி விட்டனர் என்றே கூறலாம். ஏனெனில், DRAM மற்றும் NAND விநியோக தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் மெமரி (memory) செலவுகளை சமாளிக்க, கடந்த சில மாதங்களாகவே கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் தங்கள் பல்வேறு தயாரிப்பு வரிசைகளில் விலையை உயர்த்தி வருகின்றன.

9000mAh பேட்டரி போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max):
12GB + 256GB ஆப்ஷன் - ரூ.42,999 இல் இருந்து ரூ.44,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.46,999 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
12GB + 512GB ஆப்ஷன் - ரூ.46,999 இல் இருந்து ரூ.48,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.50,999 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
6500mAh பேட்டரி போக்கோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro)
8GB + 256GB ஆப்ஷன் - ரூ.32,999 இல் இருந்து ரூ.34,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.36,999 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
12GB + 256GB ஆப்ஷன் - ரூ.35,999 இல் இருந்து ரூ.37,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.39,999 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
5520mAh பேட்டரி போக்கோ எம்8 (POCO M8)
6GB + 128GB ஆப்ஷன் - ரூ.18,999 இல் இருந்து ரூ.20,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.21,999 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
8GB + 128GB ஆப்ஷன் - ரூ.19,999 இல் இருந்து ரூ.21,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.23,999 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
8GB + 256GB ஆப்ஷன் - ரூ.21,999 இல் இருந்து ரூ.23,999 ஆக உயர்ந்து, தற்போது ரூ.25,999 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 கொண்டு இயங்குகின்றன. இரண்டுமே டூயல் சிம் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஆனது 6.83 இன்ச் 1.5கே அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இதில் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் மற்றும் 3840 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் ஆகியவை அம்சங்கள் உள்ளன.
மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஆனது 6.59-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை, அதே பீக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ரெசல்யூஷன் உடன் பேக் செய்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K தரமதிப்பீடுகளுடன் வருவதாக போக்கோ நிறுவனம் கூறுகிறது.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500எஸ் சிப்செட், 12ஜிபி LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. வெப்ப மேலாண்மைக்காக, இந்த ஸ்மார்ட்போனில் 5,800 சதுர மிமீ வெப்ப வெளியேற்றப் பரப்பளவு கொண்ட போக்கோ 3டி ஐஸ் லூப் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஆனது 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் உடன் வருகிறது. இதிலும் 12ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 256ஜிபி UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதில் வெப்பநிலையை கட்டுப்படுத்த, இந்த ஸ்மார்ட்போனில் 5,300 சதுர மிமீ வெப்ப வெளியேற்ற பரப்பளவு கொண்ட கூலிங் சிஸ்டம் உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸில் டூயல் ரியர் கேமரா யூனிட்கள் உள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/1.8) பிரைமரி கேமராக்கள் உள்ளன. இவற்றுடன் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராக்கள் இணைக்கப்பட்டு, 120-டிகிரி பீல்ட் ஆப் வியூவை வழங்குகின்றன. முன்பக்கத்தில் 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ப்ரோ மேக்ஸ் மாடலில் 9000mAh பேட்டரியும், ப்ரோ மாடலில் 6500mAh பேட்டரியும் உள்ளன. இந்த இரண்டு போக்கோ ஸ்மார்ட்போன்களிலும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன. ப்ரோ மேக்ஸ் மாடல், மிதமான பயன்பாட்டில் 3 நாட்களுக்கும் மேலான பேட்டரி பேக்கப், 18 நாட்களுக்கும் மேலான ஸ்டாண்ட்பை டைம் அல்லது ஒரே சார்ஜில் சுமார் 30 மணிநேரம் ஆன்லைன் வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கும் என்று போக்கோ நிறுவனம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications