Home
Mobile

அப்படி போடு.. ரூ.6000 பட்ஜெட்டில் புது Redmi போன்.. 8GB ரேம், Wet Touch டெக்னாலஜி, 5200mAh பேட்டரி!

ரெட்மி (Redmi) நிறுவனம், இந்திய சந்தையில் பேக்-டூ-பேக் புதிய அறிமுகங்களை செய்ய உள்ளது. முன்னதாக ஏப்ரல் 21 ஆம் தேதியன்று ரெட்மி வாட்ச் மூவ் (Redmi Watch Move) என்கிற புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஏப்ரல் 15 ஆம் தேதியன்று ரூ.6000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்ன மாடல்? அது ரெட்மி ஏ5 (Redmi A5) ஸ்மார்ட்போனாகும். நினைவூட்டும் வண்ணம் இம்மாத தொடக்கத்தில் தான் இது இந்தோனேஷிய சந்தையில் அறிமுகமானது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு யன்று இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்பது - பிளிப்கார்ட் வலைதளத்தில் நேரலையில் உள்ள போஸ்டர் ஒன்றின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்படி போடு.. ரூ.6000 பட்ஜெட்டில் புது Redmi போன்!

ஆக போக்கோ சி71 அல்ல! இந்தோனேஷியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போது, இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட, மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் போக்கோ சி71 (POCO C71) என்கிற பெயரின் கீழ், ஒரு ரீபிராண்டட் வெர்ஷன் ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது அதே ரெட்மி ஏ5 மாடலாகவே வருகிறது.

ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஆக்டா-கோர் யூனிசாக் டி7250 சிப்செட், 5200 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 கோ வெர்ஷன், 32 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், ட்ரிபிள் TÜV ரைன்லேண்ட் ஐ ப்ரொடெக்ஷன் சர்டிபிகேட்ஸ் உடனான 6.88-இன்ச் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது

ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Redmi A5 Specifications and Features):
- 720 x 1640 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.88 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
-லோ ப்ளூ லைட், ஃப்ளிக்கர்-ஃப்ரீ மற்றும் சர்க்காடியன் சான்றிதழ்கள் உள்ளிட்ட மூன்று TÜV ரைன்லேண்ட் கண் பாதுகாப்பு சான்றிதழ்கள்
- வெட் டச் டெக்னாலஜிக்கான (Wet touch technology) ஆதரவு

- 4ஜிபி LPDDR4X ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம்
- 128GB eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆக்டாகோர் யுனிசாக் டி7250 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 கோ வெர்ஷன் (இது 36 மாதங்கள் வழக்கமான பயன்பாட்டிற்கு பிறகும் புதியது போன்ற பயனர் அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது)

- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32 எம்பி மெயின் கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5200mAh பேட்டரி
- 15W வயர்டு சார்ஜிங் ஆதரவு

- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஏஐ ஆதரவுடன் கூடிய ஃபேஸ் அன்லாக் அம்சம்
- டூயல் 4ஜி VoLTE
- வைஃபை
- எப்எம் ரேடியோ
- ப்ளூடூத் 5.2
- ஜிபிஎஸ்
- க்ளோனாஸ்
- கலிலியோ
-யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- அளவீட்டில் 171.7 x 77.8 x 8.26மிமீ
- எடையில் 193 கிராம்

ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (Redmi A5 Price): இந்தோனேஷியாவில் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.6,100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையிலும் இதேபோன்ற விலை நிர்ணயத்தை நாம் எதிர்பார்க்கலாம். இது லேக் கிரீன், மிட்நைட் பிளாக் மற்றும் சாண்டி கோல்ட் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
Redmi Confirmed Redmi A5 India Launch on April 15 Check Out Expected Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X