Home
Gadgets

ஏப்.21 இந்தியாவில் அறிமுகமாகும் புது Redmi வாட்ச்.. என்ன மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனம் இந்த மாத இறுதியில் ரெட்மி வாட்ச் மூவ் (Redmi Watch Move) என்கிற புதிய ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சின் வெளியீட்டு தேதியை அறிவித்தோடு சேர்த்து, ரெட்மி நிறுவனம் அதன் வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

ரெட்மி வாட்ச் மூவ் இந்தியா வெளியீட்டு விவரங்கள் (Redmi Watch Move India Launch): ரெட்மி வாட்ச் மூவ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெட்மி நிறுவனத்தின் எக்ஸ் தள பதிவு உறுதிப்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள ஒரு லைவ் மைக்ரோசைட் ஆனது இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஷாவ்மீ இந்தியா இ-ஸ்டோர் (Xiaomi India e-store) வழியாக வாங்க கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஏப்.21 இந்தியாவில் அறிமுகமாகும் புது Redmi வாட்ச்.. என்ன மாடல்?

ரெட்மி வாட்ச் மூவ் ஸ்மார்ட் வாட்சின் வடிவமைப்பை பொறுத்தவரை. இது ஒரு ரெக்டாங்குலர் டிஸ்பிளே (rectangular display), பிளாக் டிஸ்பிளே (black display) மற்றும் வலது விளிம்பில் ஒரு க்ரவுன்-ஐ (Crown) கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்சின் போஸ்டரில் உள்ள ஒரு குறிச்சொல் - இந்த ஸ்மார்ட் வாட்சில் AMOLED ஸ்க்ரீன் பொருத்தப்பட்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. இதுதவிர்த்து வேறு எந்த அம்சங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

வெளியீட்டிற்கு முந்தைய நாட்களில் இந்த ஸ்மார்ட் வாட்ச் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான், ரெட்மி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் ரெட்மி வாட்ச் 5 (Redmi Watch 5) மாடலை அறிமுகப்படுத்தியது. நவம்பர் 2024 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாட்ச் இன்னும் இந்தியாவில் செய்யப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரெட்மி வாட்ச் 5 மாடலின் முக்கிய அம்சங்கள் (Redmi Watch 5 Major Specifications):
- 2.07 இன்ச் AMOLED ரெக்டாங்குலர் டிஸ்பிளே
- 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 1500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness)
- ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always On Display)
- 550 mAh பேட்டரி
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 நாட்கள் வரை பேட்டரி லைஃப் (Battery Life)
- 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant)

ரெட்மி வாட்ச் 5 ஸ்மார்ட் வாட்சின் விலை விவரங்கள் (Redmi Watch 5 Price Details): ரெட்மி வாட்ச் 5 மாடலின் பேஸிக் வேரியண்ட் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 6,600 க்கும், அதே நேரத்தில் இ-சிம் ஆதரவுடன் வரும் வேரியண்ட் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 9,000 க்கும் வாங்க கிடைக்கிறது

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அதன் வாட்ச் 5 ஆக்டிவ் (Redmi Watch 5 Active) மற்றும் வாட்ச் 5 லைட் (Redmi Watch 5 Lite) மாடல்களை முறையே ரூ.2,799 மற்றும் ரூ.3,999 க்கு அறிமுகம் செய்து இருந்தது. இந்த இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களுமே 18 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்குவதாகவும், 5ATM நீர் எதிர்ப்பை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை ரெட்மி வாட்ச் 5 லைட் ஸ்மார்ட் வாட்ச் மாடல் ஆனது 1.96 இன்ச் AMOLED செவ்வக வடிவ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது, அதே நேரத்தில் ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் ஸ்மார்ட் வாட்ச் மாடல் ஆனது 2 இன்ச் செவ்வக வடிவ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi to Launch New Smartwatch Called Redmi Watch Move in India on April 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X