Home
Mobile

ரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் முன்பதிவு ஆரம்பம். விலை ரூ.70,000 முதல்..

ரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் முன்பதிவு ஆரம்பம். விலை ரூ.70,000 முதல்.

By Siva

கடந்த வாரம் 9.7 இன்ச் அளவில் புதிய ஐபேடு முன்பதிவு நடந்த நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் சிகப்பு நிற ஐபோன் 7 மற்றும் 7பிளஸ் ஐபோனை குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்ய முன்பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன

ரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் முன்பதிவு ஆரம்பம். விலை ரூ.70,000

ரெட் ஐபோன்ஸ் என்று கூறபடும் இந்த சிகப்பு நிற ஐபோனின் புதிய மாடல்கள் ஒருசில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் ரிலீஸ் செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்பதும் அனேகமாக இந்த ஏப்ரல் மாதத்திற்குள் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

குராமா இணையதளத்தில் ரெட் ஐபோன் 7 மற்றும் ரெட் ஐபோன் 7 பிளஸ் விற்பனை குறித்த தகவல்கள் மற்றும் முன்பதிவு விபரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல்கள் ரூ.70,000 விலையில் இருந்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒருசில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜியோ-விற்கு தற்போது வந்த ஆபத்து? தப்பிக்கும் வழி என்ன?

குரோமா இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலின்படி இந்த ரெட் ஐபோன் 7 மாடல் இரண்டு விதமாக அதாவது 128 GB மற்றும் 256 GB ஆகிய மாடல்கள் முறையே ரூ.70,000 மற்றும் ரூ.80,000 விலையில் கிடைக்கும். அதேபோல் ரெட் ஐபோன் 7 பிளஸ் மாடல் 128 GB மற்றும் 256 GB ஆகிய மாடல்கள் முறையே ரூ.80,000 மற்றும் ரூ.92000 என்ற விலையில் கிடைக்கும்.

மேலும் இந்த குரோமா இணையதளம் தவணை முறையில், இலவச டெலிவரி வசதியும் அளித்துள்ளதோடு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ரெட் ஐபோன் மாடல்கள் டெலிவரி செய்யப்படும் சரியான தேதி குறித்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

குரோமா இணையதளம் மட்டுமின்றி ரெட் ஐபோன்7 மற்றும் ரெட் ஐபோன் 7பிளஸ் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சில்லறை விற்பனை நிலையங்களிலும் நேரில் சென்று பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இந்த ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் ஒருசில கூடுதல் பொருட்களையும் அறிமுகம் செய்துள்ளது.

ஒரிஜினல் நானோ, ஐபேட், ஆப்பிள் வாட்ச் உள்பட ஒருசில பொருட்களை இந்நிறுவனம் தனது ஷோரூம்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த ரெட் ஐபோன் மாடல்கள் இந்தியாவில் இந்த வாரம் வெளியாகும் என தெரிகிறது. இந்த தகவல் உண்மையெனில் சாம்சங் S8 மற்றும் S8 பிளஸ் மாடல்கள் வெளியாகும் தேதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Red color variants of iPhone 7 and iPhone 7 Plus are up for pre-order on the official Croma website in India. These smartphones are expected to be released this week in the country. For now, there is no information on when we can expect them to go on sale.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X