விரைவில் அறிமுகமாகும் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ Extreme Edition.! விலை மற்றும் விபரங்கள்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் Dimensity 1000+ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.55-இன்ச் S-AMOLED டிஸ்பிளே
ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.55-இன்ச் S-AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன் வெளிவரும் இந்த அசத்தலான ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் மாடல்.

ஆண்ட்ராய்டு 11
இந்த ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி மீடியாடெக் Dimensity 1000+ சிப்செட் வசதி இவற்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி பிரைமரி கேமரா
ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

4500 எம்ஏஎச் பேட்டரி
இந்த புதிய ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த புதிய சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications