Home
News

அந்த ஸ்மார்ட்போனே இந்த விலையில் கிடைக்குது: ரியல்மி சாதனங்களுக்கு பிளிப்கார்ட்டில் அட்டகாச தள்ளுபடி அறிவிப்பு!

பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில், பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு இந்த விற்பனையில் அட்டகாச தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி சாதனங்களுக்கு அட்டகாச தள்ளுபடி

ரியல்மி சாதனங்களுக்கு அட்டகாச தள்ளுபடி

ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் பிரபலமான ஒன்று ரியல்மி. ரியல்மி நிறுவனங்கள் பல்வேறு ஸ்மார்ட்போன்களை சிறந்த அம்சங்களோடு குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சிறந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ 30ஏ, ரியல்மி சி தொடர், ரியல்மி 7 உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி12 மாடலுக்கு 22 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரியல்மி சி12 ஸ்மார்ட்போனை ரூ.10,999 என்ற விலையில் இருந்து ரூ.8,499 என்ற தள்ளுபடி விலையில் பெறலாம்.

ரியல்மி நார்சோ 30ஏ சாதனம்

ரியல்மி நார்சோ 30ஏ சாதனம்

ரியல்மி நார்சோ 30ஏ சாதனம் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போனுக்கு 10% தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போனை ரூ.9,999 என்ற விலையில் இருந்து ரூ.8,999 என வாங்கலாம்.

ரியல்மி 7 ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 ஸ்மார்ட்போனுக்கு 16% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரியல்மி சாதனங்களில் ரியல்மி 7 மிகவும் பிரபலமான சாதனங்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு 16% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.17,499-க்கு விற்கப்பட்ட ரியல்மி 7 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.14,999-க்கு விற்கப்படுகிறது.

ரியல்மி சி15் ஸ்மார்ட்போன்

ரியல்மி சி15் ஸ்மார்ட்போன்

ரியல்மி சி15 ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறந்த பவர்பேக்-அப் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்று ரியல்மி சி15 சாதனமும் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனின் முன்னதாக ரூ.12,999-க்கு விற்கப்பட்டது தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999-க்கு விற்கப்படுகிறது.

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி11 ஸ்மார்ட்போனுக்கு 16 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.10,000-த்துக்கு கீழ் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இது சிறந்த தேர்வாகும். ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் முந்தைய விலை ரூ.8,999 ஆக இருந்தது, தற்போது இந்த ஸ்மார்ட்போனின் சலுகை விற்பனையாக ரூ.7,499-க்கு விற்கப்படுகிறது.

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 9 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.32,999 ஆக இருந்தது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.29,999 ஆக இருக்கிறது.

ரியல்மி 6 ப்ரோ

ரியல்மி 6 ப்ரோ

ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 11% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,999 ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு கிடைக்கிறது.

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் மூலம் 14% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999 ஆக இருந்தது, தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11,999 ஆக இருக்கிறது.

ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன்

ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன்

ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போனுக்கு 19% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் 19% வரை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முந்தைய விலை ரூ.12,999 ஆக இருந்தது தற்போது இதன் விலை ரூ.10,499 ஆக இருக்கிறது.

ரியல்மி எக்ஸ் 3 சூப்பர் ஜூம் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 3 சூப்பர் ஜூம் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 3 சூப்பர் ஜூம் ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான சலுகைகளோடு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 21% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை முன்னதாக ரூ.31,999 என விற்பனை செய்யப்பட்டது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Electronics Sale 2021: Best Discounts Announced For Realme Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X