ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

ரியல்மி நிறுவனம் இந்தோனேசியாவில் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் விலை மற்றும்
அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,408x1,080
பிக்சல் தீர்மானம், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

தூள் கிழப்பும் ஆப்பிள்- மொத்தமும் இந்தியாவில் தான்: 1 ஆண்டில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் ஏற்றுமதி!தூள் கிழப்பும் ஆப்பிள்- மொத்தமும் இந்தியாவில் தான்: 1 ஆண்டில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் ஏற்றுமதி!

Unisoc T612 சிப்செட் வசதி

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T612 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த
ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக Realme UI R Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 8 விஷயத்தை ஒருபோதும் செய்யதீர்.. இல்லையெனில் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம் செய்யப்படும்.. என்னென்ன தெரியுமா?இந்த 8 விஷயத்தை ஒருபோதும் செய்யதீர்.. இல்லையெனில் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம் செய்யப்படும்.. என்னென்ன தெரியுமா?

புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு
ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கலாங்களா?- மார்ச் 26 தொடங்கும் ஐபிஎல்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் இதோஆரம்பிக்கலாங்களா?- மார்ச் 26 தொடங்கும் ஐபிஎல்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் இதோ

நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், விடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோ ஜி 5ஜி 2022 ஸ்மார்ட்போனின் விலை இதுவா?- 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி இருக்கும் என தகவல்!

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்
மாடல்.

மோட்டோ ஜி 5ஜி 2022 ஸ்மார்ட்போனின் விலை இதுவா?- 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி இருக்கும் என தகவல்!மோட்டோ ஜி 5ஜி 2022 ஸ்மார்ட்போனின் விலை இதுவா?- 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி இருக்கும் என தகவல்!

ல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎ

4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில்
ரூ.10,600-ஆக உள்ளது. குறிப்பாக ஃப்ளாஷ் பிளாக் மற்றும் ஃப்ளாஷ் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 50A Prime With Unisoc T612 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X