மோட்டோ ஜி 5ஜி 2022 ஸ்மார்ட்போனின் விலை இதுவா?- 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி இருக்கும் என தகவல்!
மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி 2022 என்று அழைக்கப்படும் புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனில் நிறுவனம் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோட்டோ ஜி 5ஜி 2022
மோட்டோ ஜி 5ஜி 2022 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 750ஜி மூலம் இயக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கிறது. மோட்டோ ஜி 5ஜி 2022 ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் இது மூன்று பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோட்டோரோலாவின் புதிய இடைநிலை சாதனம்
மோட்டோரோலாவின் புதிய இடைநிலை சாதனமான மோட்டோ ஜி 5ஜி (2022) என அழைக்கப்படும் மாடல் எண் எக்ஸ்டி2213-ல் வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மோட்டோ ஜி 5ஜி 2022 சாதனத்துக்கான ரெண்டர்கள், முக்கிய விவரக்குறிப்புகள், விலை மற்றும் வெளியீட்டு காலவரிசை ஆகியவை தற்போது கசிந்திருக்கிறது. இது மையமாக சீரமைக்கப்பட்ட துளை-பஞ்ச் செல்ஃபி கேமரா மற்றும் தடிமனான பெசல்கள் உடனான 6.6 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி
மோட்டோ ஜி 5ஜி (2022) 6.6 இன்ச் ஸ்கிரீனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் கீயைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதே பட்டன் கைரேகை சென்சார் ஆகவும் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 750 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய வசதியோடு வரும் என கூறப்படுகிறது. எல்இடி ஃபிளாஷ் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

50 மெகாபிக்சல் முதன்மை சென்சார்
பின்புற கேமரா அமைப்பில் 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்களுடன் இணைக்கப்பட்ட 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் துளை பஞ்ச் வடிவமைப்போடு கூடிய செல்பி கேமரா இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இது இரட்டை சிம் ஆதரவை வழங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மோட்டோ ஜி 5ஜி 2022 சாதனம் ஜூன் 2022-ல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.22,990 ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. வோல்கானிக் கிரே மற்றும் ஃப்ரோஸ்டட் சில்வர் உள்ளிட்ட இரண்டு வண்ண விருப்பங்கள் உடன் இந்த சாதனம் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் மாடலில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் உடன் PowerVR GE8320 GPU ஆதரவும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் MyUX skin சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்தது.


Click it and Unblock the Notifications