தெறிக்கும் டிஸைன்.. பவர்ஃபுல் சிப்செட்.. மிரட்டும் கேமரா.. இப்படி ஒரு போன் வராதானு பல பேர் இங்க வெயிட்டிங்!
அதே பழைய, மொக்கையான பேக் பேனல் டிசைனுடன் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில், இப்படியொரு மிரட்டலான டிஸைனுடன் ஒரு ஸ்மார்ட்போன் வந்தால்.. யார் தான் 'டெம்ப்ட்' ஆக மாட்டார்கள். இதென்ன ஸ்மார்ட்போன்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:
சற்றே வித்தியாசமான வடிவமைப்பில் கவனம் செலுத்துபவர்களை ஈர்க்கும் இந்த ஸ்மார்ட்போன் - ரியல்மி ஜிடி நியோ 6 (Realme GT Neo 6) ஆகும். கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஆன்லைனில் லீக் ஆகி, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ள நிலையில், தற்போது மைஸ்மார்ட்ப்ரைஸ் (MySmartPrice) மற்றும் டிப்ஸ்டர் ஆன்லீக்ஸ் (OnLeaks) வழியாக கிடைக்கப்பெற்றுள்ள புகைப்படத்தின் வழியாக, அதன் பேக் பேனல் டிசைனை வெளிப்படையாக பார்க்க முடிகிறது.
வுட்றாதீங்க யப்போவ்.. செம்ம ஆஃபர்.. முழுசா ரூ.4500 விலை குறைப்பை பெற்ற 5ஜி போன்.. என்ன மாடல்?
லீக் ஆன புகைப்படத்தில், ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போனின் க்ரீன் கலர் வேரியண்ட்டை பார்க்க முடிகிறது (அறிமுகத்தின் போது வேறு சில கலர் ஆப்ஷன்களும் இருக்கலாம்) வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது விளிம்பில் உள்ளன. பின்புறத்தில் ஒரு பெரிய கேமரா மாட்யூல் மொபைலின் முழுப் பகுதியையும் எடுத்துக்கொள்வதை காண முடிகிறது.
அதற்குள் இரண்டு பெரிய ரிங்களை காண முடிகிறது. மேலே உள்ள ரிங்கில் ஒரேயொரு கேமரா உள்ளது. கீழே உள்ள ரிங்கில் 2 கேமராக்கள் உள்ளன. அதாவது இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை மிகவும் கச்சிதமான முறையில் பேக் செய்கிறது. இதன் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது.
இதுதவிர்த்து வெளியான புகைப்படத்தின் மூலம், ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போனின் கர்வ்டு எட்ஜுகளை பார்க்க முடிகிறது. இது சிறந்த பிடிமானத்திற்காக சற்றே வட்டமான மூலைகளையும் கொண்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக இதன் கேமரா ஐலேண்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டின் (Snapdragon 8 Gen 2) லோகோவையும், சூப்பர்வூக் (SuperVOOC) பிராண்டிங்கையும் பார்க்க முடிகிறது.
ஒரு ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பேக் பேனலில் வெளிப்படுத்தும் முயற்சியை ரியல்மி செய்வது முதல் முறை அல்ல. நினைவூட்டும் வண்ணம் இதேபோன்ற வடிவமைப்பு ரியல்மி ஜிடி 5 நியோ ஸ்மார்ட்போனில் காணப்பட்டது. அதிலிருந்த லோகோவின் பின்னால் ஆர்ஜிபி லைட் இடம்பெற்று இருந்தது. அது நியோ 6 மாடலிலும் இடம்பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, 1.5கே பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வரலாம். சிப்செட்டை பொறுத்தவரை, லீக் ஆன புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, இது அட்ரெனோ ஜிபியு உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வரலாம்.
பேட்டரியை பொறுத்தவரை, தற்போது வரையிலாக ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி பற்றி தகவல்கள் இல்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி மெயின் கேமரா சென்சாரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








