வுட்றாதீங்க யப்போவ்.. செம்ம ஆஃபர்.. முழுசா ரூ.4500 விலை குறைப்பை பெற்ற 5ஜி போன்.. என்ன மாடல்?
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆனது பிரபலமான 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக ரூ.4500 என்கிற நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதென்ன மாடல்? அதன் புதிய விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
ரூ.4,500 என்கிற தள்ளுபடியை பெற்றுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி (Samsung Galaxy A34 5G) ஸ்மார்ட்போன் தான். பெரிய டிஸ்பிளே, நீடித்த பேட்டரிலைஃப் மற்றும் நல்ல ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது 12% தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது ரூ.4500 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம், இதன் அசல் விலை ரூ.35,499 ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.30,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுவாரசியமாக எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகள் மூலம் இதன் விலையை இன்னும் குறைக்க முடியும்.
எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்: அமேசான் வழியாக கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் உங்களுக்கு ரூ.22,800 வரை தள்ளுபடி கிடைக்கும். இதற்காக நீங்கள் நல்ல நிலையில் உள்ள உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யவேண்டி இருக்கும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்தே உங்களுக்கான தள்ளுபடி நிர்ணயம் செய்யப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி மீது பல வகையான வங்கி சலுகைகள் அணுக கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால் ரூ.3000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும். எஸ்எஸ்பிசி கேஷ்பேக் கார்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் கீழ் 5% உடனடி தள்ளுபடி (ரூ.250) கிடைக்கும்.
அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்த விலைப்பிரிவில் ஈர்க்கக்கூடிய அம்சங்களை கொண்டுள்ளது என்றே கூறலாம். இது ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் அளவிலான எஸ்அமோஎல்இடி டிஸ்பிளேவை (sAMOLED display) கொண்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் (MediaTek Dimensity 1080) மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization - OIS) உடனான 48எம்பி ப்ரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது.
முன்பக்கத்தை பொறுத்தவரை, டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் உள்ள ட்யூ டிராப் நாட்ச்சில் 13எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (அவுட் ஆப் பாக்ஸ்) அடிப்படையிலான சாம்சங்கின் சொந்த ஒன்யுஐ 5.1 மூலம் இயங்குகிறது.


Click it and Unblock the Notifications








