என் ஈகோவை டச் பண்ணிடீங்க.. 8.25 மிமீ ஸ்லிம் டிசைனில் 7200mAh பேட்டரி.. Realme-யின் புது போன்.. என்ன மாடல்?
7300mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மற்ற பிராண்டுகளின் ஈகோவை டச் செய்துவிட்டது போல் தெரிகிறது. கிட்டத்தட்ட பெரிய பிராண்டுகளுமே தத்தம் பிக்கஸ்ட் பேட்டரி ஸ்மார்ட்போன்களை அறிவித்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் ரியல்மி நிறுவனமும் சேர்ந்துள்ளது.
ரியல்மியின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மாடல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது (சீன அறிமுகத்திற்கு பின்னர், இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்; ஏனென்றால் ரியல்மி ஜிடி 6 மாடல் இந்தியாவில் அறிமுகமானது).

அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலையில், ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது 100W பாஸ்ட் சார்ஜிங் உடனான 7200mAh பேட்டரி உடன் வரும் என்பதை ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. 2025 ஆம் ஆண்டில், இதுவரையிலாக இவ்வளவு அதிக திறன் கொண்ட பேட்டரி பிளாக்ஷிப் போன் எதுவும் அறிமுகம் ஆகவில்லை. அந்த இடத்தை ரியல்மி ஜிடி 7 நிரப்பும்!
பெரிய அளவிலான பேட்டரியை செய்தாலும் கூட, இந்த ஸ்மார்ட்போன் 8.25மிமீ என்கிற அளவிலான மிகவும் ஸ்லிம் ஆன டிசைனையும் மற்றும் எடையில் 203 கிராமும் மட்டுமே இருக்கும் என்பதையும் ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் ஆனது 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 8.6மிமீ டிசைனை கொண்டுள்ளது
ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- BOE ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு பிளாட் ஆன 144Hz டிஸ்பிளே
- மெல்லிய பெஸல்கள் மற்றும் ஸ்க்ரீனில் கீழ் ஒரு அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- நீர் எதிர்ப்பிற்கான ஐபிP69 ரேட்டிங்
- மீடியாடெக்-ன் புதிய 3என்எம் டைமன்சிட்டி 9400+ சிப்செட்
- விலை ரூ.35,000 - ரூ.40,000 க்குள் இருக்கலாம்.
ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது கிளாஸ் போன்ற பினிஷ் கொண்ட டூயல் டோன் ரியர் பேனலை (Dual-tone rear panel with a mirror-like finish) கொண்டுள்ளது. அதில் 2 கேமரா மாட்யூல்கள் (2 camera modules) மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual-LED flash) உள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1 முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 100% டிசிஐ-பி3 கலர் கேமட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7+ Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய சிப்செட்டை கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் கூட இதுவாகும். மேலும் இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 5 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் அதன் பேக் பேனலில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 32மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது. கடைசியாக ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் ஆனது 5500mAh பேட்டரியுடன் வருகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை (120W fast charging) ஆதரிக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியை 50 சதவிகிதம் சார்ஜ் செய்யும்.


Click it and Unblock the Notifications