Home
Mobile

7300mAh பேட்டரி, 90W சார்ஜிங், 12GB ரேம், ஆரா லைட்.. ஏப்.16 முதல் SALE.. அட்ரா சக்கை விலையில் புது iQOO போன்!

என்னது ரூ.22,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 7300mAh பேட்டரி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனா.. என்று பலரையும் வாய் பிளக்க வைத்த ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போன் இன்று (2025 ஏப்ரல் 11 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகமானது. இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்ன விலை? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ், 5000 நிட்ஸ் ஆதரவு உடனான 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 12ஜிபி வரை ரேம் உடனான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

ஏப்.16 முதல் SALE.. புது iQOO போன்.. 7300mAh பேட்டரி, 90W சார்ஜிங்!

மேலும் இது 50எம்பி மெயின் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பையும், 32எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15 மூலம் இயங்குகிறது. இதற்கு மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். கடைசியாக இது 90W வேகமான சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய, 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 2392 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம், 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே

- அட்ரெனோ 720 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 128ஜிபி / 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடனான 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32MP செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி

- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார்
- யூஎஸ்பி டைப்-C ஆடியோ, பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர்
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65
- 5ஜி (SA / NSA)
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ax
- ப்ளூடூத் 5.2
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி
- அளவீட்டில் 7.92மிமீ
- எடையில் 199 கிராம்

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது க்ளேசியர் சில்வர் (Glacier Silver) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது .

பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை ரூ.21,999 என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.23,999 என்றும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் ஐக்யூ இந்தியா இஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
iQOO Z10 5G with 7300mAh Battery Launched in India Price Specifications Sale From April 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X