ரூ.60,000 கிடக்குது.. ரூ.20,000 பட்ஜெட்டில் 5ஜி, 7000mAh பேட்டரி, 24GB ரேம்.. அசத்தும் புது Realme போன்!
இந்திய சந்தையில் இம்மாதம், மற்ற நிறுவனங்கள் எல்லாம் 7000mAh க்கும் அதிகமான பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட பிளாக்ஷிப் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை ரூ.60,000 மற்றும் அதற்கு மேலான பட்ஜெட்டில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், ரியல்மி நிறுவனமானது - அதை ரூ.20,000 பட்ஜெட்டில் செய்யவுள்ளது.
எந்த மாடல்? அது ரியல்மி சி85 5ஜி (Realme C85 5G) ஸ்மார்ட்போன் ஆகும். எக்ஸ் தளம் வழியாக @yabhishekhd வழியாக கிடைத்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரியல்மி இன்னும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே பைப்லைனில் இருக்கிறது. மேலும் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே வியட்நாம் சந்தையில் அறிமுகமாகி விட்டதால், இது சத்தமின்றி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
வியட்நாமில் அறிமுகமான ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், ஹை பிரைட்னஸ் மோட்-ல் (HBM) 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.8-இன்ச் எச்டி பிளஸ் (1570 × 720) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது,
சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட மல்டி டாஸ்கிங்கிற்காக 24ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்-ஐயும் வழங்கும். இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6 (Realme UI 6) கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் சோனி IMX852 பிரைமரி ரியர் சென்சார் மற்றும் செல்பீக்களுக்கான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது டூயல் ஸ்பீக்கர்ஸ், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு மற்றும் 6050 மிமீ சதுர விசி கூலிங் சிஸ்டம் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது ஐபிP69 ப்ரோ-ரேட்டட் நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு கட்டமைப்பையும் கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் 166.07 × 77.93 × 8.38 மிமீ மற்றும் எடையில் சுமார் 215 கிராம் உள்ளது.
என்ன விலை? வியட்நாமில் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.22,100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.24,100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேரட் பர்பிள் (Parrot Purple) மற்றும் பீகாக் க்ரீன் (Peacock Green) ஆகிய 2 கலர்களில் வெளியாகியுள்ளன.
இந்திய சந்தையிலும் நாம் இதேபோன்ற விலை நிர்ணயத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் சரியான விலை விவரங்கள் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு பின்னரே தெரிய வரும். இம்மாதம் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி அன்று ரியல்மி நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக (வெளியான லீக் உண்மையாகும் பட்சத்தில்) ரியல்மி சி85 5ஜி நவம்பர் 20 க்கு பின் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








