Home
Mobile

OnePlus 15 ஓகயா.. அதே சிப்செட், 7000mAh பேட்டரி, 200MP கேமரா, 16GB ரேம்.. புதிய Realme போன்.. நவ.20 அறிமுகம்!

ஒருவழியாக.. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி அன்று சீன சந்தையில் அறிமுகமான ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை (India Launch Date) ரியல்மி நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது வருகிற நவம்பர் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸ் 15 மற்றும் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன்களில் உள்ள அதே ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் வருகிறது.

OnePlus 15 ஓகயா.. அதே சிப்செட், 7000mAh பேட்டரி உடன் புது Realme போன்!

ஆக இந்த 3 மாடல்களுக்கும் இடையேயான போட்டி கடுமையாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது வெற்றி பெறும், எது இந்தியர்களை ஈர்க்கும் என்பது அந்தந்த ஸ்மார்ட்போன்களுக்கு செய்யப்படும் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தே அமையும். சீனாவில் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக இந்தியாவில் இது ரூ.60,000-க்குள் என்கிற பட்ஜெட்டில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.59,990-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 15 மற்றும் ஐக்யூ 15 மாடல்களை விட மலிவான விலைக்கே வரும். ஐக்யூ 15 ஆனது இந்தியாவில் ரூ.65,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் 15 ஆனது இந்தியாவில் ரூ.65,000 - ரூ.75,000-க்குள் ரியாள்ம் மி என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம்.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனானின் முக்கிய அம்சங்கள்:
- 6.79-இன்ச் க்யூஎச்டி பிளஸ் அமோஎல்இடி பிளெக்சிபில் டிஸ்பிளே
- 1440 x 3136 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்

- 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 3200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 100 சதவீதம் sRGB
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5
- 16GB வரையிலான LPDDR5X ரேம்
- 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 22 மிமீ ஃபோக்கல் லெங்த்,டூ-ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் (எப் /1.8) ரிக்கோ ஜிஆர் ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200 மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா

- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி
- டூயல் சிம் ஆதரவு
- ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) ஓஎஸ்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- பேஸ் ரிகக்னைசேஷன் ஆதரவு

- ப்ராக்ஸிமிட்டி சென்சார்
-ஆம்பியண்ட் லைட் சென்சார்
- கலர் டெம்ப்ரேச்சர் சென்சார்
- எலெக்ட்ரானிக் காம்பஸ்
- ஆக்ஸலரேஷன் சென்சார்
- கைரோஸ்கோப்
- ஹால் சென்சார்
- ப்ளூடூத் 6
- வைஃபை 7
- என்எப்சி (NFC)
- அளவீட்டில் 161.80x76.87x8.30 மிமி
- எடையில் 218 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 8 Pro India Launch Date Confirmed It is November 20 See Full Specifications Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X