சியாமி நிறுவன தயாரிப்புகளின் அதிரடி தீபாவளி சலுகை விற்பனை

By Siva
|

கிழக்கு நாடுகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியாமி நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா உள்பட பல நாடுகளில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் மேலும் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சியாமி நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை அறிவித்துள்ளது.

சியாமி நிறுவன தயாரிப்புகளின் அதிரடி தீபாவளி சலுகை விற்பனை

ஒரே ஒரு ரூபாய்க்கு சியாமி போன், லக்கி டிராவில் ஸ்மார்ட்போன் உள்பட பல சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஜியோ ஜிகாபைபர்.? ஏர்டெல் வி-பைபர்.? இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடுகள் என்ன.?

மேலும் இந்த சலுகை அக்டோபர் 17 முதல் 19 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரே ஒரு ரூபாய் விற்பனை சலுகை:

ஒரே ஒரு ரூபாய் விற்பனை சலுகை:

அக்டோபர் 17 முதல் 19 வரையில் தினமும் மதியம் 2 மணிக்கு மட்டுமே இந்த விற்பனை அனுமதிக்கப்படும். மேலும் நாள் ஒன்றுக்கு 20 ஸ்மார்ட்போன்கள் ஒரே ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும். அதிர்ஷ்டம் உள்ள நபர்கள் முயற்சி செய்து பார்க்கவும். சியாமி நிறுவனத்தின் சியாமி ரெட்மி பிரைம் மற்றும் ரெட்மி நோட் 3, மி 4, மி புளூடூத் ஸ்பீக்கர், 20,000Ah மி பவர் பேங்க், மற்றும் மி பேண்ட் ஆகியவை இந்த ஒரு ரூபாய் சலுகை விற்பனையில் கிடைக்கும்,

ரூ.500 ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள் என்னென்ன தெரியுமா?

ரூ.500 ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள் என்னென்ன தெரியுமா?

தீபாவளி திருநாளை முன்னிட்டு சியாமி நிறுவனம் தனது தயாரிப்புகளான சியாமி ரெட்மி 3S, ரெட்மி 3S பிரைம், மற்றும் ரெட்மி நோட் 3 (2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்) ஆகிய தயாரிப்புகள் ரூ.6,499, Rs. 8,499, and Rs. 9,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 சலுகை விலை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ள சியாமி ரெட்மி நோட் 3 மாடல் மட்டும் ரூ.1000 தள்ளூபடி செய்யப்பட்டு விலை ரூ.10,999 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த தீபாவளி சலுகை விற்பனையை சியாமி நிறுவன தயாரிப்புகளின் ரசிகர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி மி மேக்ஸ் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி

சியாமி மி மேக்ஸ் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி

இந்தியார்கள் பெரிதும் விரும்பும் சியாமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடலான சியாமி மி மேக்ஸ் மாடலுக்கு இந்நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு ரூ.1000 தள்ளுபடி செய்கிறது. பெரிய ஸ்க்ரீன் மாடலான இந்த விலை இந்த தள்ளுபடியால் 14,999 இல் இருந்து 13,999 க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,

சியாமி மி 5-க்கு ரூ.3000 தள்ளுபடியா?

சியாமி மி 5-க்கு ரூ.3000 தள்ளுபடியா?

தீபாவளியை முன்னிட்டு சியாமி மி 5 மாடல் ரூ.19,999க்கு விற்பனை செய்ய சியாமி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை ரூ.3000 தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தீபாவளிக்கு அறிமுகமாகும் புதிய மாடம் மி மேக்ஸ்

தீபாவளிக்கு அறிமுகமாகும் புதிய மாடம் மி மேக்ஸ்

இந்தியாவில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சியாமி நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய மாடல் மி மேக்ஸ். அக்டோபர் 17ஆம் தேதி கிரே மற்றும் கோல்ட் கலர்களில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999ஆகும். 6.44-இன்ச் டிஸ்ப்ளேவுடன் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 128GB வரை இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. அமேசான் இந்தியா மற்றும் சியாமி நிறுவனத்தின் இணையதளங்களில் இருந்து இந்த ஸ்மார்ட்போனை பெற்று கொள்ளலாம்.

10,000mAh மி பவர் பேங்க் வேண்டுமா?

10,000mAh மி பவர் பேங்க் வேண்டுமா?

தீபாவளி சிறப்பு சலுகையாக சியாமி நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான 10,000mAh மி பவர் பேங்க் சலுகை விலையில் விற்பனையாகவுள்ளது. 12.58mm வடிவத்தில் 10,000mAh சக்தியுள்ள பவர் பேங்க் தீபாவளி சலுகையாக வெறும் ரூ. 1,999 இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மி ஏர் பியூரிபயர் 2 மற்றும் மி பேண்ட் 2

மி ஏர் பியூரிபயர் 2 மற்றும் மி பேண்ட் 2

சியாமி நிறுவனத்தின் மேற்கண்ட சலுகை விலையுடன்

மி ஏர் பியூரிபயர் 2 மற்றும் மி பேண்ட் 2 ஆகிய பொருட்கள் ரூ.9,999 மற்றும் ரூ.1,999 விலைகளில் கிடைக்கும்

வேறு சலுகைகள்:

வேறு சலுகைகள்:

சியாமி நிறுவனத்தின் மி இயர் ஹெட்போ புரோ, மி கேப்சூல் இயர்போன், மி புளூடூத் ஸ்பீக்கர் ஆகியவை முறையே ரூ.1,399, ரு,.899 ம்ற்றும் ரூ.1,999 விலைகளில் கிடைக்கும்,. மேலும் இந்த பொருட்களுக்கு ரூ.400, ரூ.100 மற்றும் ரூ.700 ஆகிய தள்ளுபடி சலுகையும் உண்டு.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xiaomi, the Apple of East, in order to lure Indian customers into buying its products, is offering huge discounts on smartphones and other accessories as part of its Diwali sale.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X