ரூ.1க்கு விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்!

By Meganathan
|

தீபாவளி பண்டிகையை ஒட்டி எல்லா ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் புதுப்புதுச் சலுகையை அறிவித்து வருகின்றன. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் விற்பனை திருவிழா ஒருபக்கம் இருக்க ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது பங்கிற்குச் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.

அந்த வரிசையில் புதிய நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளது. இந்தியாவில் குறுகிய காலகட்டத்தில் அதிவேக வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த நிறுவனமும் தங்களது கருவிகளை ரூ.1க்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ்

ஒன்பிளஸ்

சியோமி நிறுவனத்தைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் தங்களது கருவிகளை ரூ.1 என்ற விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தீபாவளி டேஷ் சேல்

தீபாவளி டேஷ் சேல்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இணைய வர்த்தக இணையதளத்தில் மட்டும் நடைபெறும் இந்த விற்பனை ஒன்பிளஸ் டேஷ் சேல் என்ற பெயரில் நடத்தப்படுகின்றது.

சியோமி

சியோமி

ஏற்கனவே தனது கருவிகளை ரூ.1க்கு விற்பனை செய்து வரும் சியோமி நிறுவனத்தைப் போன்றே ஒன்பிளஸ் பயனர்களும் ஸ்மார்ட்போன்களுக்கு முன்பதிவு செய்ததும், ஒன்பிளஸ் தனது அக்சஸரீகளையும் விற்பனை செய்ய இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தேதி

தேதி

ஒன்பிளஸ் தீபாவளி டேஷ் சேல் விற்பனையானது அக்டோபர் 24 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 26 ஆம் தேதி நிறைவு பெறுகின்றது. நாள் ஒன்றிற்கு மூன்று முறை அதாவது மதியம் 12.00 மணி, மாலை 4.00 மணி மற்றும் இரவு 8.00 மணிக்கு இந்த பிளாஷ் விற்பனை நடைபெறும்.

பதிவு

பதிவு

பிளாஷ் விற்பனையில் கலந்து கொள்ள விரும்பும் பயனர்கள் ஒன்பிளஸ் ஸ்டோரில் சைன் அப் செய்ய வேண்டும். பின் மொபைல் போன் நம்பர், மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இறுதியில் பயனர்கள் #DiwaliDashSale என்ற பதிவினை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாய்ப்பு

வாய்ப்பு

பயனர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தங்களது ஒன்பிளஸ் கருவிகளுடன் வெரிஃபை செய்தோ அல்லது இந்தப் போட்டி குறித்து தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மிஸ்ட்ரி பாக்ஸ்

மிஸ்ட்ரி பாக்ஸ்

மற்ற ஒரு ரூபாய் பிளாஷ் சேல் போன்று இல்லாமல் ஒன்பிளஸ் விற்பனையில் பயனர்கள் மிஸ்ட்ரி பாக்ஸ்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த பாக்ஸ்களில் ஏதேனும் ஒரு ஒன்பிளஸ் கருவி இருக்கும். இதில் ஒன்பிளஸ் 3 ரோஸ் கோல்டு பதிப்பும் கூட இருக்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சலுகை

சலுகை

ஒரு பயனர் ஒரே ஒரு மிஸ்ட்ரி பாக்ஸ் மட்டுமே தங்களது அக்கவுண்ட் மூலம் தேர்வு செய்ய முடியும். மிஸ்ட்ரி பாக்ஸ் கார்ட்டில் சேர்க்கப்பட்டதும் பயனர்கள் ரூ.1/- செலுத்தி அதனுள் இருக்கும் பொருளை அறிந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்தப்படாத பாக்ஸ்கள் மூன்று மணி நேரத்தில் திரும்பப் பெறப்படும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus to offer Re 1 Diwali Dash Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X