Home
Mobile

மெகா திரை கொண்ட ப்லம் டிபட் ஸ்மார்ட்போன்!

By Super
மெகா திரை கொண்ட ப்லம் டிபட் ஸ்மார்ட்போன்!

டிபட் என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்த மாதம் அறிமுகம் செய்துள்ளது ப்லம் நிறுவனம். சமீபத்தில் ப்லம் நிறுவனம் ஏக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதற்கும் அடுத்ததாக டிபட் என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது.

டிபட் ஸ்மார்ட்போன் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் திரையினை கொண்டது என்று கூறலாம். இந்த டிபட் ஸ்மார்ட்போன் 7 இஞ்ச் தொடுதிரையினை வழங்கும். தகவல்கள், புகைப்படங்கள் எதுவாக இருப்பினும் அதை தெளிவாக இதன் திரையில் எளிதாக பார்க்கலாம். இந்த திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினையும்

பெறலாம்.

2592 x 1944 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவினை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். ரியர் கேமரா மட்டும் அல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டது.

114 கேபிபிஎஸ் வேகத்தில் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தினையும், 480 கேபிபிஎஸ் வேகத்தில் எட்ஜ் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இதன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சிறப்பாக இயங்க வைக்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும், எம்எஸ்எம்7227டி ப்ராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

டிபட் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 4,250 எம்ஏஎச் பேட்டரியினை கொண்டது. 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த பேட்டரியின் மூலம் 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 4 மணி நேரம் டாக் டைமினையும் கொடுக்க முடியும்.

கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கலக்கும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் டாக் போன்ற பல வசதிகளை பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X