Home
Mobile

புதுவரவாக ப்லம் ஏக்ஸ் ஸ்மார்ட்போன்!

By Super
புதுவரவாக ப்லம் ஏக்ஸ் ஸ்மார்ட்போன்!

புதிய நிறுவனங்களும் தனது படைப்பின் சிறப்பை நிரூபித்து வருகின்றன. ப்லம் நிறுவனமும் அப்படித்தான். ஏக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை ப்லம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கும், சிறப்பான தொழில் நுட்ப அம்சங்களுக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும்.

ஆன்ட்ராய்டு 2.3.7 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் டியூவல் கேமராவினை கொண்டுள்ளது. ஐபிஎஸ் எல்சிடி திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன், எடை வெறும் 98 கிராம்தான்.

இந்த ஸ்மார்ட்போன் திரையிலும் பிரம்மாண்டம் காட்டி மிரட்டுகிறது. 4.0 இஞ்ச் திரை உள்ளதால், கையில் வத்து இயக்கும் பொழுது வசதியாக இருக்கும். 5 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் அல்லாமல், விஜிஏ கேமரா வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெறலாம்.

இந்த கேமராவில் லெட் ப்ளாஷ் வசதி உள்ளதால், குறைந்த வெளிச்சத்தில் கூட தெளிவான புகைப்படத்தினை பெறலாம். கிட்டத்தட்ட டிஜிட்டல் கேமராவில் எடுத்தால் எத்தகைய துல்லியம் கிடைக்குமோ அந்த அளவு துல்லியம் இந்த கேமராவில் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் இந்த கேமராவில் 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தினை பெறலாம்.

இதில் உள்ள எல்லா வசதிகளும் சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இதன் பேட்டரியின் ஆற்றல் மிக குறைவாக இருப்பதாக தெரிகிறது. இதில் 800 எம்ஏஎச் எல்-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 3 மணி நேரம் டாக் டைம் மட்டுமே பெற முடியும்.

3ஜி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில், பேட்டரியின் ஆற்றல் மிக குறைவாக தெரிகிறது. மற்றபடி எல்லா கையிலும் சிறப்பான தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X