Home
Mobile

சைலன்ட் ஆக விலை குறைப்பு.. ரூ.15,000 இருந்தா போதும்.. இந்த 5 பெஸ்ட் கேமரா போன்களில் 1 உங்களுக்கு தான்!

பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் போதும் அமேசான் வலைத்தளத்தை கையில் பிடிக்க முடியாது. சிறப்பு விற்பனை என்கிற பெயரில் பல்வேறு வகையான தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் மீது நம்ப முடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடியை அறிவித்து, வாடிக்கையாளர்களை திக்குமுக்காட செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது!

அப்படியாக நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளையொட்டி அமேசான் (Amazon) வலைத்தளமானது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Great Indian Festival Sale) என்கிற சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடக்கும் இந்த சிறப்பு விற்பனை, சரியாக எந்த தேதியில் முடிவடையும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சைலன்ட் ஆக விலை குறைப்பு.. ரூ.15,000 இருந்தா போதும்!

அமேசானின் இந்த சிறப்பு விற்பனை முடிவடைவதற்குள் சலுகை விலையில் வாங்க கிடைக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள விரும்பினால்.. குறிப்பாக உங்களுடைய பட்ஜெட் ரூ.20000 க்குள் இருந்தால்.. இதோ அமேசானில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத சில மொபைல் போன் சலுகைகள்:

01. ரியல்மி நார்சோ 60 (Realme Narzo 60): 64எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.4 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் போன்ற அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது வெறும் ரூ.16499 க்கு வாங்க கிடைக்கும்.

02. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G): 13எம்பி செல்பீ, 50எம்பி + 8எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 120Hz 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே, எக்ஸினோஸ் 1280 சிப்செட், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது வெறும் ரூ.15999 க்கு வாங்க கிடைக்கும்.

03.ரெட்மி நோட் 12 (Redmi Note 12): 48எம்பி + 8எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 8ஜிபி ரேம் போன்ற அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது வெறும் ரூ.15999 க்கு வாங்க கிடைக்கும்.

04. ஐக்யூ இஸட்7எஸ் (iQOO Z7s): 64எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.38-இன்ச் AMOLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G சிப்செட், 8ஜிபி ரேம் போன்ற அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது வெறும் ரூ.16999 க்கு வாங்க கிடைக்கும்.

5. போக்கோ எக்ஸ்5 (Poco X5): 48எம்பி + 8எம்பி + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.67 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 8ஜிபி வரை ரேம் போன்ற அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது வெறும் ரூ.15699 க்கு வாங்க கிடைக்கும்.

அமேசான் வலைத்தளத்தை போலவே பிளிப்கார்ட் வலைத்தளமும் கூட பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days Sale) என்கிற தனது சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. அதிலும் கூட பல வகையான ஸ்மார்ட்போன்களின் மீது நம்ப முடியாத சலுகைகள் கிடைக்கிறது. அது தொடர்பான கட்டுரையை அணுக இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Planing to Buy Good Camera Phones Under 20000 Top Deals in Amazon Great Indian Festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X