Home
Mobile

கடைசி 5 நாட்கள்.. Motorola முதல் OnePlus வரை.. 5 பெஸ்ட் 5G போன்கள் மீது முரட்டு ஆஃபர்.. என்னென்ன மாடல்கள்?

அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடக்கவுள்ள.. அதாவது இன்னும் 5 நாட்களில் முடியவுள்ள பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் எக்கசக்கமான ஸ்மார்ட்போன்களின் மீது ஏகபோகமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால்.. எதை வாங்குவது என்கிற குழப்பம் எழுவது மிகவும் சகஜம்!

அப்படியான குழப்பத்தில் நீங்களும் இருந்தால், அதிலும் குறிப்பாக ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற தேடலில் நீங்கள் இருந்தால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்து உள்ளீர்கள். இதோ எங்களுடைய டாப் 5 பரிந்துரைகள்:

கடைசி 5 நாட்கள்.. 5 பெஸ்ட் 5G போன்கள் மீது முரட்டு ஆஃபர்!

அதாவது விரைவில் முடியவுள்ள பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் (Flipkart Big Billion Days Sale) போது, ரூ.20000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம். கூடவே இந்த 5 மாடல்களில் எதை நம்பி வாங்கலாம் என்கிற முடிவையும் கட்டுரையின் முடிவில் பகிர்ந்து உள்ளோம்.

01. மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G): இந்த பட்டியலில் உள்ள 5 மாடல்களில் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் பெரும்பாலான போன்களை காலி செய்கிறது என்றே கூறலாம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆன 8ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.15,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): இந்த பட்டியலில் உள்ள ஒரே ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இதுதான். 120ஹெர்ட்ஸ் 6.72-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 5000mAh பேட்டரி, 108எம்பி மெயின் கேமரா, 2 வருட ஓஎஸ் அப்டேட்டிற்கான வாக்குறுதியுடன் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் பிளிப்கார்ட்டில் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

03. ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11x 5G): இந்த பட்டியலில் உள்ள 5 மாடல்களில் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். 6.72-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 64எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் பிளிப்கார்ட்டில் ரூ.12999 க்கு வாங்க கிடைக்கிறது.

04. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G): இந்த பட்டியலில் உள்ள ஒரே ஒரு ரெட்மி ஸ்மார்ட்போன் இதுதான். இது 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக மூன்றுமே ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வந்து விடுகிறது.

நிகழும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் பேஸிக் வேரியண்ட் ரூ.15,999 க்கும், மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.17,499 க்கும் வாங்க கிடைக்கிறது. கடைசியாக உள்ள ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.19,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

05. ரியல்மி 11 5ஜி (Realme 11 5G): இந்த பட்டியலில் உள்ள இரண்டாவது ரியல்மி ஸ்மார்ட்போன் இதுவாகும். நிகழும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.16,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

இந்த 5 போன்களில்.. எதை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்? சந்தேகத்திற்கு இடமின்றி மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனை தான் நாங்கள் பரிந்துரைப்போம். ஒருவேளை நீங்கள் மோட்டோரோலா பிராண்டிங்கை முன்பின் வாங்கியதே இல்லை என்றால், நீங்கள் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Smartphone Deals Under Rs 20000 in Flipkart Big Billion Days Sale 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X