Home
Mobile

OPPO-வின் புது போனால் மொபைல் மார்கெட்டில் அதிர்வலை.. முதல் முறையாக இரண்டு 200MP கேமரா, 7000mAh பேட்டரி!

என்ன அம்புட்டு பேரும் 'அல்ட்ரா' மாடலில் இறங்கிட்டாங்க என்று கூறும்படியாக ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போனின் அறிமுகம் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று நடக்கும் என்று தகவல் வெளியான வேகத்தில் ஒப்போ (Oppo) நிறுவனத்தின் புதிய 'அல்ட்ரா' ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

அது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) ஸ்மார்ட்போனாகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸின் டாப்-எண்ட் வேரியண்ட் ஆக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் மிகவும் சமீபத்தில் தான் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் ஆகின.

OPPO-வின் புது போனால் மொபைல் மார்கெட்டில் அதிர்வலை!

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனால் பகிரப்பட்ட புதிய லீக்கின் படி, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ராவில் டூயல் 200 மெகாபிக்சல் கேமரா செட்டப் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த பிரிவில், இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வருவது முதல் முறையாகும்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ள ப்ரைமரி கேமரா ஆனது 200 மெகாபிக்சல் சூப்பர்-லார்ஜ் சென்சார் (200-megapixel super-large sensor) என விவரிக்கப்படுகிறது. இது ஒளி உட்கொள்வதில் (light intake) தற்போதைய 1-இன்ச் கிளாஸ் சென்சார்களை விஞ்சும் என்று கூறப்படுகிறது.

மேலும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் லீக் ஆனது இந்த ஸ்மார்ட்போனால் இரண்டு பெரிஸ்கோப் கேமராக்கள் இருக்கும் என்று கூறுகிறது. ஒன்று - மிதமான ஃபோக்கல் லெங்த்களில் ஹை குவாலிட்டி லாஸ்லெஸ் ஜூமிங்கை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட 200 மெகாபிக்சல் மிட்-ரேஞ்ச் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஆகும்.

இரண்டாவது பெரிஸ்கோப் கேமராவானது ஒரு பிரத்யேக அல்ட்ரா-லாங்-ரேஞ்ச் பெரிஸ்கோப் ஆக இருக்கும். இது 50-மெகாபிக்சல் சென்சாரை சுற்றி கட்டமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவரங்கள் துல்லியமாக இருந்தால், இந்த மட்டத்தில் சொந்த 10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன் கேமரா செட்டப் ஆக இது மாறும். இது தொலைதூரத்தில் உள்ள சப்ஜெக்ட்கள் மற்றும் கனமான டிஜிட்டல் க்ராப்பிங் இல்லாமல் நெருக்கமான புகைப்படம் எடுத்தல் ஆகிய இரண்டையும் சரியாக செய்யலாம்.

கேமராக்களுக்கு அப்பால், ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்பால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 16 ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம்

பேட்டரியை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,000mAh க்கும் அதிகமான பேட்டரியை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்தை பொறுத்தவரை இது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்: 12ஜிஜி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன ரூ.74,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ்9 மாடலுக்கான ஒப்போ ஹசல்பிளாட் டெலிகன்வெர்ட்டர் கிட்டையும் (Oppo Hasselblad Teleconverter Kit) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 29,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9 Ultra Tipped to Pack Dual 200MP Camera Setup Expected Launch in Q1 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X