டிச.25 அறிமுகம்.. Mobile Photography தலை எழுத்தை மாற்றும் புது Xiaomi போன்.. ட்ரிபிள் Leica கேமரா செட்டப்!
ஒருவழியாக ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஆனது அதன் அடுத்த அல்ட்ரா (Ultra) ஸ்மார்போனின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. கூடவே அதன் டிசைன் மற்றும் க்ரீன் கலர் ஆப்ஷனையும் வெளிப்படுத்தி உள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்கிற விவரங்கள் இதோ:
என்ன மாடல்? அது ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும். இது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) மாடலுக்கு அடுத்தபடியாக வரும் அப்கிரேடட் ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது ஷாவ்மீ நிறுவனம் ஷாவ்மீ 16 அல்ட்ரா (Xiaomi 16 Ultra) மாடலை 'ஸ்கிப்' செய்கிறது.

எப்போது அறிமுகம்? ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி அன்று, உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு) அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகேம் வேண்டாம் (ஷாவ்மீ 15 அல்ட்ராவை போலவே).
என்னென்ன அம்சங்கள்? இந்த ஸ்மார்ட்போன் ஷாவ்மீ x லைக்கா (Xiaomi x Leica) இமேஜிங் ஸ்ட்ரெடிஜிக் கோஆப்ரேஷன் அப்கிரேட் ஈவென்ட்டின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஷாவ்மீ நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் ஷாவ்மீ நிறுவனம் புதிய சைமன்டேனியஸ் டெலிபோட்டோ ஆப்டிகல் சிஸ்டம் (Simultaneous telephoto optical system) மற்றும் லோட் லைட் போட்டோகிராஃபியில் (Low light photography) ஒரு "பெரிய பாய்ச்சல்" ஆகியவற்றை டீஸ் செய்துள்ளது.
மேலும் ஷாவ்மீ 17 குறித்த ஒரு டீஸர் போட்டோ, அது பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களை வெளிப்படுத்துகிறது. டிசைனை பொறுத்தவரை பேக் பேனலில் உள்ள ரியல் எஸ்டேட்டின் பெரும்பகுதி பெரிய கேமரா ஐலேண்ட் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் டெகோவின் உள்ளே லைக்கா பிராண்டிங் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அடுத்தடுத்த வீடியோவில், ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் க்ரீன் கலர் ஆப்ஷனும் டீஸ் செய்யப்பட்டது
8.29 மிமீ தடிமன் கொண்ட ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது இதுவரை வெளியான ஷாவ்மீ ஸ்மார்ட்போன்களிலேயே மிக மெல்லிய அல்ட்ரா மாடல் என்றும் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்கள் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று நடக்கும் வெளியீட்டில் அறிவிக்கப்படலாம். இந்தியா உட்பட உலகளாவிய அறிமுகம் குறித்த விவரங்கள் வரும் காலங்களில் வெளியாகும்.
முன்னதாக அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








