Home
Mobile

மொபைல் மார்க்கெட்டின் ராஜாதி ராஜா.. 200MP கேமரா, 7500mAh பேட்டரி, IP69 ரேட்டிங் உடன் புது OPPO போன்!

ஒப்போ (OPPO) நிறுவனம் தனது லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (Find X9 Series ) மாடல்கள் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சீரீஸின் கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளன? ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற நவம்பர் 18 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது இன்னும் சில நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் 15 (OnePlus 15), ஐக்யூ 15 (iQOO 15) மற்றும் ரியல்மி ஜிடி8 ப்ரோ (Realme GT8 Pro) ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடும்.

200MP கேமரா, 7500mAh பேட்டரி, IP69 ரேட்டிங் உடன் புது OPPO போன்!

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15 ஆனது பைண்ட் எக்ஸ்9 சீரிஸிற்கு சற்று முன்பு, நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 20 ஆம் தேதி அன்று ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கடைசியாக ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஆகிய இரண்டுமே ஏற்கனவே சீனாவில் மற்றும் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், விலை மற்றும் அம்சங்கள் குறித்து பெரிய அளவிலான குழப்பங்கள் இல்லை. தோராயமான விலைகளை நாங்கள் அறிவோம். சரியான விலை மற்றும் விற்பனை தேதி நவம்பர் 18 அன்று அறிவிக்கப்படும்.

சீனாவில் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம்: ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோவின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,34,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,03,000 க்கு அறிமுகமாகி உள்ளது.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல் ஆனது சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். ஸ்டாண்டர்ட் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மாடல் ஆனது ஸ்பேஸ் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் அமோ எல்இடி டிஸ்பிளே
- 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- ஹசல்பிளாட்-ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ ஃபோக்கல் லெங்த் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ ஃபோக்கல் லெங்த் மற்றும் ஓஐஎஸ்)
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா

- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேட்

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சிப்செட், ஓஎஸ், ஐபி ரேட்டிங், டிராப் ப்ரொடெக்ஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- ஓஐஎஸ் ஆதரவு உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- ஓஐஎஸ் ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா
- ப்ரோ மாடலைப் போலவே வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
- 7025mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Pro and OPPO Find X9 Smartphones Launching in India on November 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X