ராவண மவன் டா.. ரூ.18000 பட்ஜெட்ல புது OnePlus போன் அறிமுகம்.. 7000mAh பேட்டரி, மிலிட்டரி கிரேட்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE 6 Lite) மாடல், இன்று (மே.7) இந்தியாவில் அறிமுகமானது. இதோடு சேர்த்து ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போனை பற்றி இங்கே விரிவாக காண்போம்; கூடவே ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மாடலின் விலை, சலுகை மற்றும் விற்பனை விவரங்களையும் மேலோட்டமாக பார்ப்போம்; இந்த ஸ்மார்ட்போனை விரிவான அம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். நார்ட் சிஇ 6 லைட்டை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் விலை, ஆபர், விற்பனை: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோஎரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
அறிமுக சலுகையாக எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) மூலம் ரூ.2,000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆக ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் மாடலை ரூ.18,999 முதல் (ரூ.18000 பட்ஜெட்டில்) வாங்கலாம்.
விற்பனையை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் ஆனது மே 12 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல் ஹைப்பர் பிளாக் மற்றும் விவிட் மின்ட் ஆகிய 2 கலர்களில் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும்.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் விரிவான அம்சங்கள்:
-144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே
- 1,000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 240Hz வரையிலான டச் சாம்பிளிங் ரேட்
- 392 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 91.4 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP64 ரேட்டிங்
- MIL-STD-810H சான்றிதழ்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் எஸ்ஓசி
- ஏஆர்எம் மாலி-ஜி615 ஜிபியு
- UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR4X ரேம்
- 21,683 சதுர மிமீ விசி கூலிங் சிஸ்டம்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2.88-இன்ச் ஓம்னிவிஷன் OV50D40 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் (எப்/2.4) இரண்டாம் நிலை கேமரா
- 89-டிகிரி பீல் ஆப் வியூ மற்றும் 10எக்ஸ் வரையிலான டிஜிட்டல் ஜூம்
- 4K/30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்
- 8-மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- 5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4
- ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட், GPS, GLONASS, BDS, Galileo மற்றும் QZSS
- ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
இதோடு சேர்ந்து அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் விலை, ஆபர், விற்பனை: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது நாளை, அதாவது மே 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். ஏர்லி பேர்ட் டீலின் ஒரு பகுதியாக, ரூ.2,000 உடனடி வங்கித் தள்ளுபடியுடன் இது வாங்க கிடைக்கும். இது ஃப்ரெஷ் ப்ளூ, லூனார் பேர்ல் மற்றும் பிட்ச் பிளாக் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications