Home
Mobile

OnePlus Nord CE 6 அறிமுகம்.. ரூ.2000 தள்ளுபடியில் மே.8 முதல் SALE.. 8000mAh பேட்டரி, IP69K, 12GB ரேம்!

ஒன்பிளஸின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6) மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE 6 Lite) மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனை பற்றி விரிவாக காண்போம்; கூடவே நார்ட் சிஇ 6 லைட்டின் விலை விவரங்களையும் மேலோட்டமாக பார்ப்போம்:

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.78-இன்ச் 1.5K 10-பிட் AMOLED டிஸ்பிளே
- 3,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- ஹை பிரைட்னஸ் மோடில் (HBM) 1,800 நிட்ஸ் வரை செல்லும்
- உச்சபட்சமாக 1,430 நிட்ஸ் மற்றும் 1,300 நிட்ஸ் ஹை பிரைட்னஸ்
- ஆழமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்குவதற்காக டிஸ்பிளே பெசல்கள் சுருக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் குறிப்பிடுகிறது.

OnePlus Nord CE 6 அறிமுகம்.. ரூ.2000 தள்ளுபடியில் மே.8 முதல் SALE!

- 4என்எம் அடிப்படையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 8GB அல்லது 12GB LPDDR4X ரேம்
- 5,000 mm² வேப்பர் சேம்பர்
- ஒன்பிளஸ் 15-ல் உள்ள டச் ரிஃப்ளெக்ஸ் சிப்பை பயன்படுத்தி, ஆதரிக்கப்படும் கேம்களில் 3,200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட்
- சப்வே சர்ஃபர்ஸ், கிளாஷ் ராயல், கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் மற்றும் சில கேம்களை 144FPS வேகத்தில் இயல்பாக விளையாட முடியும்.

- திரைப்படம் பார்க்கும் மற்றும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, நார்ட் சிஇ 5-ல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை முற்றிலுமாக தவிர்த்திருந்த ஒன்பிளஸ், இந்த முறை அவற்றை சேர்த்துள்ளது
- IP66, IP68, IP69, மற்றும் IP69K ரேட்டிங்
- மேம்படுத்தப்பட்ட நீடித்துழைக்கும் தன்மைக்கான MIL-STD-810H சான்றிதழ்

- 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை லென்ஸ்
- 32MP செல்பீ கேமரா
- ரியர் கேமராக்கள் மூலம் 4K 30 FPS வீடியோ பதிவு செய்யும் வசதி
- 8,000mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங்
- மற்ற டிவைஸ்களை 27W வரைஇலாப ஸ்பீடில் ரிவர்ஸ்-சார்ஜ் செய்ய முடியும்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OxygenOS 16 ஓஎஸ்

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 விற்பனை மற்றும் அறிமுக சலுகைகள்: இது நாளை, அதாவது மே 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். ஏர்லி பேர்ட் டீலின் ஒரு பகுதியாக, ரூ.2,000 உடனடி வங்கித் தள்ளுபடியுடன் இது வாங்க கிடைக்கும். இது ஃப்ரெஷ் ப்ளூ, லூனார் பேர்ல் மற்றும் பிட்ச் பிளாக் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட்ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மே 12 முதல் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 6 With 8000mAh Battery Launched in India Sale Starts May 8 With Rs 2000 Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X