Home
Mobile

புது போன் வாங்குற பிளானை நிறுத்துங்க.. 9000mAh பேட்டரி உடன் 2 புதிய OnePlus போன்கள் வருது.. என்ன மாடல்கள்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது சமீபத்தில் 9000mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் டர்போ 6 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்து இருந்தது. இதை தொடர்ந்து ஒன்பிளஸ் தனது அடுத்த நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தக்கூடும் என்கிற தகவல் கிடைத்துள்ளது

ஒன்பிளஸ் நிறுவனம் மிட்-ரேன்ஜ் பிரிவின் கீழ் ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி (OnePlus Turbo 6V) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் நோர்ட் பிராண்டிங்கின் கீழ் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான ஊகங்கள் உருவாகி வருகின்றன.

9000mAh பேட்டரி உடன் 2 புதிய OnePlus போன்கள் வருது.. என்ன மாடல்கள்?

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளுக்கு டர்போ 6 சீரீஸ் மாடலை ரீபிராண்டிங் செய்யலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒன்பிளஸ் டர்போ 6 மாடல் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஆகவும் , ஒன்பிளஸ் டர்போ 6வி மாடல் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6) ஆகவும் அறிமுகப்படுத்தப்படலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த காலங்களில் இதேபோன்ற ஒரு உத்தியை பின்பற்றி உள்ளது. அதாவது சீனாவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்ட டர்போ மாடல்களை சர்வதேச சந்தைகளுக்கு "அம்சங்கள் மற்றும் மென்பொருளில்" சிறிய மாற்றங்களுடன் கொண்டு வந்துள்ளது. இந்த அணுகுமுறை ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரீஸ் ,மாடல்களிலும் பின்பற்றப்படலாம்.

ஒன்பிளஸ் டர்போ 6 சீரீஸ் விலை: சீனாவில் ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனின் 12 GB RAM + 256 GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.27,000 க்கும், 12 GB + 512 GB, 16 GB + 256 GB, மற்றும் 16 GB + 512 GB ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.30,000, ரூ.33,000 மற்றும் ரூ.37,000 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மறுகையில் உள்ள ஒன்பிளஸ் டர்போ 6வி ஸ்மார்ட்போனின் 8 GB RAM + 256 GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.21,000 க்கும், 12 GB + 256 GB, 12 GB + 512 GB ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.24,000 மற்றும் ரூ.28,00 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 16
- 6.78-இன்ச் FHD+ (1272 x 2,772 பிக்சல்ஸ் பிளெக்ஸிபிள் AMOLED டிஸ்ப்ளே
- 450ppi பிக்சல் டென்சிட்டி
- 60Hz முதல் 165Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்

- 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 330Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- அட்ரெனோ 825 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்
- 16GB LPDDR4X ரேம் மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்

- 1.8 அபெக்ஷர், ஆட்டோஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ப்ரைமரி கேமரா
- 20x டிஜிட்டல் ஜூம் வரை கொண்ட 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 80W SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 9,000mAh பேட்டரி

ஒன்பிளஸ் டர்போ 6வி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஒன்பிளஸ் டர்போ 6 மாடலில் உள்ள அதே சிம் சப்போர்ட், ஓஎஸ், டிஸ்பிளே மற்றும் ஐபி ரேட்டிங்
- அட்ரெனோ 810 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்

- 12GB LPDDR4X ரேம் மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோராஜ்
- டூயல் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் வைட் ஆங்கிள்ப்ரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ்
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 9,000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 and Nord CE 6 Could be Rebranded Versions of 9000mAh Battery OnePlus Turbo 6 Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X