2026 சர்ப்ரைஸ்.. 9000mAh பேட்டரி உடன் 2 புதிய OnePlus போன்கள் அறிமுகம்.. பக்காவான பட்ஜெட் விலையில்!
ஒன்பிளஸ் நிறுவனமானது சீனாவில் 2 புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளார். அவைகள் ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி (OnePlus Turbo 6V) மாடல்கள் ஆகும். இவ்விரு ஸ்மார்ட்போன்களில் ஒன்று இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 16
- 6.78-இன்ச் FHD+ (1272 x 2,772 பிக்சல்ஸ் பிளெக்ஸிபிள் AMOLED டிஸ்ப்ளே
- 450ppi பிக்சல் டென்சிட்டி
- 60Hz முதல் 165Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்

- 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 330Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- அட்ரெனோ 825 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்
- 16GB LPDDR4X ரேம் மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1.8 அபெக்ஷர், ஆட்டோஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ப்ரைமரி கேமரா
- 20x டிஜிட்டல் ஜூம் வரை கொண்ட 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 80W SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 9,000mAh பேட்டரி
ஒன்பிளஸ் டர்போ 6வி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஒன்பிளஸ் டர்போ 6 மாடலில் உள்ள அதே சிம் சப்போர்ட், ஓஎஸ், டிஸ்பிளே மற்றும் ஐபி ரேட்டிங்
- அட்ரெனோ 810 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- 12GB LPDDR4X ரேம் மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோராஜ்
- டூயல் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் வைட் ஆங்கிள்ப்ரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ்
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 9,000mAh பேட்டரி
ஒன்பிளஸ் டர்போ 6, மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி விலை விவரங்கள்: ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனின் 12 GB RAM + 256 GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.27,000 க்கும், 12 GB + 512 GB, 16 GB + 256 GB, மற்றும் 16 GB + 512 GB ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.30,000, ரூ.33,000 மற்றும் ரூ.37,000 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இது லைட் சேஸர் சில்வர், லோன் பிளாக் மற்றும் வைல்ட் கிரீன் ஆகிய 3 கலர்களில் வெளியாகியுள்ளது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் டர்போ 6வி ஸ்மார்ட்போனின் 8 GB RAM + 256 GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.21,000 க்கும், 12 GB + 256 GB, 12 GB + 512 GB ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.24,000 மற்றும் ரூ.28,00 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது ஃபியர்லெஸ் ப்ளூ, லோன் பிளாக் மற்றும் நோவா வைட் (சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) வண்ணங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








