OnePlus 15 கிடக்குது.. அதைவிட ரூ.20000 கம்மி விலைக்கு இன்னொரு புது 7800mAh பேட்டரி OnePlus போன் அறிமுகம்!
ஒன்பிளஸ் நிறுவனமானது, ஒன்பிளஸ் 15 உடன் சேர்த்து ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. பெயரை கேட்டதும் குழப்பம் அடைய வேண்டாம். சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஆக அறிமுகமாகும் மாடல், இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) என்கிற பெயரின் கீழ் "அதே அம்சங்களுடன்" அறிமுகமாகும்.
அதாவது இது ஒன்பிளஸ் 15 சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் 15உடன் சேர்ந்து ஒன்பிளஸ் 15ஆர் என்கிற பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகமாகும். இப்போதைக்கு இந்திய அறிமுக தேதி உறுதி செய்யப்படவில்லை. எப்படியும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகி விடும்.

ஒன்பிளஸ் ஏஸ் 6 விலை, கலர் ஆப்ஷன்கள் மற்றும் விற்பனை விவரங்கள்: சீனாவில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.32,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை விட கிட்டத்தட்ட ரூ.20,000 குறைவான ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்ற விலையை நாம் இந்திய சந்தையில் எதிர்பார்க்க முடியாது என்றாலும் ஒன்பிளஸ் 15ஆர் ஆனது இந்தியாவில் ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம். இதேபோல ஒன்பிளஸ் 15 ஆனது ரூ.60,000 - ரூ.65,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் மற்ற ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலை விவரங்கள்:
16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - தோராயமாக ரூ.36,000
12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - தோராயமாக ரூ.38,800
16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - தோராயமாக ரூ.42,200
16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - தோராயமாக ரூ.48,400
ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி முதல் ஒப்போ இ-ஷாப் (Oppo e-Shop(, ஜேடி மால் (JDMall) மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிற ஆன்லைன் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கும். இது குவிக் சில்வர் (Quicksilver), பிளாஷ் ஒயிட் (Flash White) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வரும்.
ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 165Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் 1.5கே (1272 x 2800 பிக்சல்கள்) பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே 3டி பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் கண்-பாதுகாப்பிற்கான அம்சங்களும் உள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது, இது 16ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ்-ஹெவி பணிகளை கையாள ஜி2 கேமிங் சிப்பும் உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு 16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனானது 7800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலைப்பிரிவில் இதுவொரு மிகப்பெரிய பேட்டரி என்று கூறப்படுகிறது. இது 120W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆனால் ஒன்பிளஸ் 15 மாடலில் இருப்பதை போல வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இல்லை.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இது தூசி மற்றும் நீர் ஊடுருவலுக்கு எதிரான பாதுகாப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்களை கொண்டுள்ளது. இது ஒரு பிளஸ் கீ உடன் வருகிறது. இது ரிங் மோட்களுக்கு இடையில் மாற பயன்படுகிறது. இது கஸ்டமைஸ் செய்யலாம்" கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்டை மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்வது போன்ற பணிகளையும் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








