அக்.28 முதல் SALE.. OnePlus 15 அறிமுகமானது.. சொன்ன மாதிரியே விலை கம்மி.. 7300mAh பேட்டரி, 120W சார்ஜிங்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனெரஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல் இன்று (அக்.27) சீனாவில் அறிமுகமானது. குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், 7300mAh பேட்டரி, 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆகிய ரீடிசைன் செய்யப்பட்ட 50எம்பி ஸ்கொயர் ட்ரிபிள்-ரியர் கேமரா யூனிட் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை: சீனாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன்கள் முறையே (சுமார்) ரூ.53,000, ரூ.57,000 மற்றும் ரூ.61,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் ஒன்பிளஸ் 15 மாடலின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.67,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது அப்சல்யூட் பிளாக், மிஸ்டி பர்பிள் மற்றும் சாண்ட் டியூன் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் நாளை முதலே (அக்டோபர் 28) ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக சீனாவில் விற்பனைக்கு வருகிறது.
ஓஎஸ் மற்றும் டிஸ்பிளே: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை (third-generation BOE Flexible AMOLED display) கொண்டுள்ளது.
இது 165ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K (1272 x 2772 பிக்சல்கள்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 ppi பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளே 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் வண்ணங்களையும் ஆதரிக்கிறது.
சிப்செட்: ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது, இது 4.608GHz பீக் கிளாக் ஸ்பீடை வழங்குகிறது. இது 16GB வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1TB வரையிலான UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமரா: ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. அதில் 24மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்ஃபி கேமரா உள்ளது. ரியர் கேமரா செட்டப்பானது 30 fps இல் 8K வீடியோக்களை படமாக்கும் திறனை கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்: ஒன்பிளஸின் இந்த புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது 7300mAh பேட்டரியை பேக்ஸ் செய்கிறது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. அளவீடுகளில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனானது 161.42x76.67x8.10 மிமீ மற்றும் எடையில் சுமார் 211 கிராம் உள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: ஆன்போர்ட் சென்சார்களின் பட்டியலில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், ஹால் சென்சார், லேசர் ஃபோகஸ் சென்சார், ஸ்பெக்ட்ரம் சென்சார், ஐஆர் பிளாஸ்டர் உட்பட பல சென்சார்கள் உள்ளன. இது இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








