ஆக்சிஜன் ஓஎஸ் 3.5.3 மாற்றத்துடன் இந்தியாவில் வெளிவரும் ஒன்ப்ளஸ் 3T ஸ்மார்ட்போன்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்ட்டாக இணைந்த ஒன்ப்ளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்ப்ளஸ் 3T என்ற புதிய மாடலை வெளீயிட்டது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்ட்டாக இணைந்த ஒன்ப்ளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்ப்ளஸ் 3T என்ற புதிய மாடலை வெளீயிட்டது. இந்த மாடல் ஸ்மார்ட்போனில் தற்போது ஆக்சிஜன் ஓஎஸ் 3.5.3 அளவில் உள்ள ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லே 6.0.1 மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றத்துடன் கூடிய ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் நிறுவனத்தில் சலுகை விலையில் கிடைக்கின்றது.
கோப்புகளை பிடிஎப் ஆக ப்ரிண்ட் செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)
ஏற்கனவே ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது புதிய மாடலான ஒன்ப்ளஸ் 3T ஸ்மார்ட்போனின் ஓ.எஸ்-ஐ விரைவில் மாற்ற இருப்பதாக அறிவித்ததை அடுத்து தற்போது டிசம்பர் 15 முதல் இந்த மாற்றத்தை உறுதி செய்துள்ளது. இந்த மாற்றம் இரண்டாவது முறையாக செய்யப்படும் மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறும் மற்றும் எடிட் செய்யும் அம்சம்.!?
ஆக்சிஜன் ஓஎஸ் 3.5.3 மாற்றப்படுவதால் இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மாலேவின் ஆக்சிஜன் ஓஎஸ் 3.5.3 பயனாளிகளின் நண்பனாக இருந்து வருகிறது. மேலும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் எண்ணம் எல்லாம் ஆண்ட்ராய்டு 7 நெளகட் ஓஎஸ்-ல் இருந்தாலும் தற்போதைக்கு இந்த மாற்றத்தை மட்டுமே செய்துள்ளது.

ஆனால் விரைவில் ஒன்ப்ளஸ் 3 மற்றும் ஒன்ப்ளஸ் 3T ஆகிய இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு நெளக்ட் ஓஎஸ் பொருத்த வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் கொள்கையாக உள்ளது. இந்த கனவு அனேகமாக விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வருட இறுதிக்கு வர வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது.
புதிய மாற்றம் செய்யப்பட்ட ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனை அமேசான் நிறுவனம் டிசம்பர் 17 முதல் ஆர்டர்கள் பெற துவங்குகின்றன. நிறைய சலுகைகளும் வெளிவரும் இந்த ஒன்ப்ளஸ் 3T மாடலுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications