வந்த வேகத்தில் iPhone 17 க்கு வேட்டு.. 211 கிராமில் 7000mAh பேட்டரி உடன் புதிய OnePlus போன்!
ஆப்பிளின் புதிய ஐபோன் 17 (iPhone 17) மாடல் ஆனது இந்தியாவில் ரூ.82,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இன்னும் இது விற்பனைக்கே வரவில்லை, அதற்குள் ஐபோன் 17 க்கு பதிலாக வேறு எந்தெந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என்கிற விவாதங்கள் தொடங்கி விட்டன.
உண்மையில் ஐபோன் 17 க்கான ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள் இங்கு நிறைய உள்ளன. ஆனால் அடுத்தடுத்து வரவப்போகும் ஸ்மார்ட்போன்கள் தான் - நிஜமான போட்டியாளர்களாக இருக்கும். அந்த வரிசையில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல் ஐபோன் 17-க்கான மிக முக்கியமான எதிரியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள் மற்றும் அவைகள் வெவ்வேறு வகையான எடைகளில் வரும் என்கிற விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இதோடு சேர்த்து (தற்போதைய ஃபிளாக்ஷிப் மாடல் ஆன ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் "அப்கிரேடட் வெர்ஷன்" ஆன) ஒன்பிளஸ் 15 எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரலாம்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 15 கலர் ஆப்ஷன்கள் மற்றும் அவைகளின் எடை விவரங்கள்: சீன டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆப்சொலுயுட் பிளாக் (Absolute Black), ட்யூன் (Dune) மற்றும் மிஸ்ட் பர்பிள் (Mist Purple) ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படும்
இந்த 3 கலர் ஆப்ஷன்களில் ட்யூன் கலர் ஆப்ஷன் ஆனது ஒன்பிளஸ் 15-ஐ சந்தைப்படுத்துவதற்கான முக்கிய வேரியண்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ட்யூன் கலர் ஆப்ஷன் ஆனது மற்ற 2 கலர் ஆப்ஷன்களை விட சற்றே எடை குறைவானதாக இருக்குமாம்.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ட்யூன் கலர் ஆப்ஷன் ஆனது 211 கிராம் எடையினை கொண்டிருக்கும் மற்றும் ஒப்பீட்டளவில் மற்ற கலர் ஆப்ஷன்களை விட மிகவும் இலகுவானதாக இருக்கும். மறுகையில் இருக்கும் ஆப்சொலுயுட் பிளாக் மற்றும் மிஸ்ட் பர்பிள் ஆகிய இரண்டுமே 215 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 15 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது ரூ.82,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் 17 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனை விட மலிவான விலைக்கு வரலாம்!
ஒன்பிளஸ் 15 எப்போது அறிமுகமாகும்? இந்த ஸ்மார்ட்போன் ஆனது வருகிற 2025 அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பின்னர் இந்தியாவில் ஜனவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் எப்படி அறிமுகமானதோ அதேபோலவே அறிமுகமாகும்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான "உயரமான" 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். அதில் OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 50-மெகாபிக்சல் 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராக்கள் இடம்பெறலாம்
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் ரியர் கேமரா யூனிட் ஆனது வட்ட வடிவில் இருந்து சதுரமாக மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட் கொண்டு இயக்கப்படலாம். கடைசியாக இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய மிகப்பெரிய 7,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








