Home
Mobile

நாங்க இருக்கோம்.. iPhone 17 க்கு பதிலாக வேறு எந்தெந்த போன்களை வாங்கலாம்? 5 ஆப்ஷன்ஸ் இருக்கு!

மொபைல் மார்க்கெட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் கிளப்பிய சலசலப்புகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. புதிய ஐபோன் ஏர் மாடல், 12ஜிபி வரை ரேம், 2டிபி வரை ஸ்டோரேஜ், விமர்சனம் செய்ய முடியாத அளவிலான் விலை நிர்ணயம் என.. ஐபோன் 17 சீரீஸ் மாடல்களில் - கிட்டத்தட்ட எல்லாமே ஓகே தான்!

அதற்காக "இது தான் பெஸ்ட்", "இதற்கு ஈடு எதுவுமே இல்லை" என்றெல்லாம் கூறிவிட முடியாது. ஜித்தனுக்கு ஜித்தன் ஒருத்தன் இருக்கத்தான் செய்வான் என்பது போல.. ஐபோன் 17 (iPhone 17) அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, ஐபோன் 17-க்கான எதிரிகள் (அதாவது போட்டியாளர்கள்) ரெடியாக காதிர்கொண்டிருந்தன.

iPhone 17 க்கு பதிலாக வேறு எந்தெந்த போன்களை வாங்கலாம்? 5 ஆப்ஷன்ஸ்!

அப்படியாக ஆப்பிளின் புதிய ஐபோன் 17 மாடலுக்கு பதிலாக நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:
1. ஒன்பிளஸ் 13 (OnePlus 13)
2. கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10)
3. சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25)
4. ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ (Oppo Find X8 Pro)
5. ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16)

5வது இடத்தில் ஐபோன் 16 இருப்பதை பார்த்து யாரும் குழப்பம் அடைய வேண்டாம். வழக்கமாக புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமானதும், பழைய மாடல்களின் விலை கடுமையாக குறையும். ஆக ஐபோன் 16 மாடலின் விலை ஆனது வருகிற பண்டிகை கால சிறப்பு (அமேசான், பிளிப்கார்ட்) விற்பனைகளின் போது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறையும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷன் ரூ.74,900 க்கும், அதே வேரியண்ட் அமேசான் இந்தியாவில் ரூ.69,900 க்கும் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2025 ஆகிய விற்பனையின் போது, இந்த விலை இன்னும் குறையலாம்.

ஆப்பிளின் புதிய ஐபோன் 17 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கும், ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் ஏர் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 17 ப்ரோ ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,54,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,74,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,49,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,69,900 க்கும், 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,29,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாடல்களுமே செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும், பின்னர் ஒரு வாரம் கழித்து, அதாவது செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 17 சீரீஸ் மீது என்னென்ன ஆபர்கள் கிடைக்கும் என்கிற விவரங்களை உள்ளடக்கிய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17 Alternative Smartphones OnePlus 13 Google Pixel 10 Samsung Galaxy S25 Oppo Find X8 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X