தலைவன் திமிங்கலம் தானுங்கோ.. 9000mAh பேட்டரி, 12GB ரேம், IP69 உடன் புது OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஆனது ஒரே நேரத்தில், 2 வெவ்வேறு சந்தைகளுக்கான, 2 வெவ்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை உடனடியாக அறிமுகம் செய்ய தயாராகி வருவது போல் தெரிகிறது. ஒன்று - சீன சந்தைக்கான ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடல் - இது இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்; ஆனால் உடனே வராது.
ஆனால் ஒன்பிளஸ் 15எஸ் உடனே அறிமுகம் செய்யப்பட்டது; இந்திய அறிமுகத்திற்கு குறைந்தது 1 மாத காலம் ஆகலாம். அதற்கு முன்பாகவே ஒன்பிளஸ்-ன் மிட்ரேன்ஜ் சீரீஸ் ஆன நோர்ட் சீரீஸின் கீழ் ஒரு புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. அது ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக்செய்யலாம் ? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கிற விவரங்கள் லீக் ஆகியுள்ளன. அதன்படி இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் வரலாம். இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட்6 ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50MP LYT-600 OIS ப்ரைமரி கேமரா + 8MP அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராக்களுடன் வரலாம். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங் உடன் வரலாம். கடைசியாக இது 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது 2026 மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ரூ.35,000 க்கும் அதிகமான விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications and Features): டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) ஸ்கின் கொண்டு இயங்குகிறது.
முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: ஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் 12GB வரை LPDDR5x RAM உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி LYT-700 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது. கூடவே எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது.
முன்பக்கத்தில், இது சாம்சங் ISOCELL JN5 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6,800mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது சேர்க்கப்பட்ட அடாப்டருடன் 80W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65 ரேடிங்கையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








