OnePlus 13 விலை குறைந்தது.. இதுக்கு தானே வெயிட் பண்ணோம்.. எல்லாம் OnePlus 15 வரும் நேரம்!
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி வெளியானதுமே ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் மீது விலை குறைப்புகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான் - அதற்காக இப்படியாஎன்று கூறும் அளவிற்கு ஒன்பிளஸ் 13 மீது ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.75,000 வரை செல்லலாம் என்று கூறப்படும் நிலையில், ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் 13 மாடலை வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே அதற்கான சரியான நேரமாகும்.

ஏனென்றால் தற்போது விஜய் சேல்ஸ் (Vijay Sales) வழியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது மிகப்பெரிய தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த சலுகை புறக்கணிக்க முடியாத அளவுக்கு "தி பெஸ்ட் டீல்" ஆகவும் உள்ளது. அப்படி என்ன ஆபர்?
விஜய் சேல்ஸ்-ல் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது தற்போது ரூ.69,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் எம்ஆர்பி ஆன ரூ.72,999 இலிருந்து நேரடி விலை குறைப்பாகும் இதுமட்டுமல்ல, ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ (IDFC First Bank Credit Card EMI) பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.10,000 வரை உடனடி 5% தள்ளுபடியும் கிடைக்கும்
இதன் மூலம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.59,999 ஆக குறைக்கலாம். அதாவது மொத்தம் ரூ.13,000 சேமிக்கலாம். இது - தற்போது ஆன்லைனில் கிடைக்கும் சிறந்த ஒன்பிளஸ் 13 டீல்களில் ஒன்றாகும்
OnePlus சலுகைகளில் ஒன்றாகும். கூடுதல் சேமிப்புக்காக, பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களையும் எக்ஸ்சேன்ஜ் செய்யலாம்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது
முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








