தேதி குறிச்சாச்சு.. OnePlus 15 இந்திய அறிமுக தேதி அறிவிப்பு.. அதே விலைக்கு வந்தா ஆர்டர் அள்ளுவது உறுதி!
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி (India Launch Date) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது - குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் இந்திய சந்தையில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும்!
நினைவூட்டும் வண்ணம் இது கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது வருகிற நவம்பர் 13 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகமாகி விட்டதால், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த குழப்பமும், இது சீனாவை போலவே இந்தியாவிலும் மலிவான விலைக்கு வருமா? என்பது மட்டுமே கேள்வி!

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை (third-generation BOE Flexible AMOLED display) கொண்டுள்ளது.
இது 165ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K (1272 x 2772 பிக்சல்கள்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 ppi பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளே 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் வண்ணங்களையும் ஆதரிக்கிறது.
ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது, இது 4.608GHz பீக் கிளாக் ஸ்பீடை வழங்குகிறது. இது 16GB வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1TB வரையிலான UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. அதில் 24மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்ஃபி கேமரா உள்ளது. ரியர் கேமரா செட்டப்பானது 30 fps இல் 8K வீடியோக்களை படமாக்கும் திறனை கொண்டுள்ளது.
ஒன்பிளஸின் இந்த புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது 7300mAh பேட்டரியை பேக்ஸ் செய்கிறது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. அளவீடுகளில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனானது 161.42x76.67x8.10 மிமீ மற்றும் எடையில் சுமார் 211 கிராம் உள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இதன் ஆன்போர்ட் சென்சார்களின் பட்டியலில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், ஹால் சென்சார், லேசர் ஃபோகஸ் சென்சார், ஸ்பெக்ட்ரம் சென்சார், ஐஆர் பிளாஸ்டர் உட்பட பல சென்சார்கள் உள்ளன. இது இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சீன விலை விவரங்கள்: சீனாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.65,000 - ரூ.75,000 க்குள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது அப்சல்யூட் பிளாக், மிஸ்டி பர்பிள் மற்றும் சாண்ட் டியூன் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








