OnePlus ரசிகர்களுக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. நினைச்சத விட முன்னாடியே அறிமுகமாகும் OnePlus 12.. எப்போது?
ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) மற்றும் நோர்ட் சிஇ 3 (Nord CE 3) ஸ்மார்ட்போன்களின் கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ள நிலைப்பாட்டில், ஒன்பிளஸ் 12 (OnePlus 12) எப்போது அறிமுகமாகும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளது.
கிடைக்கப்பெற்ற விவரங்களை வைத்து பார்க்கும் போது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 ஆனது எதிர்பார்த்ததை விட சற்றே முன்னதாக அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. அதாவது இது இந்த 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

சீன சமூக ஊடகத்தளமான வெய்போ (Weibo) வழியாக டிப்ஸ்டர் எக்ஸ்பீரியன்ஸ் மோர் (Experience More) பகிர்ந்துள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனானது வருகிற டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும். அதுமட்டுமின்றி, இது இன்னும் அறிவிக்கப்படாத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படலாம்.
குவால்காம் நிறுவனமானது தனது அடுத்த ஸ்னாப்டிராகன் ஃபிளாக்ஷிப் மொபைல் பிளாட்ஃபார்மை (Flagship mobile platform) வருகிற அக்டோபர் மாதம் ஹவாயில் நடைபெறும் குவால்காம் உச்சி மாநாட்டில் (Qualcomm Summit) வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், ஒன்பிளஸ் 12 ஆனது டிசம்பரில் அறிமுகமாகும் என்கிற லீக்ஸ் தகவலை இன்னும் பலப்படுத்துகிறது.
எல்லா யூகங்களும் சரியாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 12 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். சிப்செட்டை தவிர்த்து, ஒன்பிளஸ் 12 ஆனது கர்வ்டு டிஸ்பிளே (Curved Display), 1.5கே ரெசல்யூஷன் மற்றும் செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் போன்றவைகளை கொண்டிருக்குமென்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் டிஸ்பிளேவின் சரியான அளவு தற்போது வரை தெரியவில்லை. ஒருவேளை இதன் டிஸ்பிளே ஒன்பிளஸ் 11-ஐ போலவே இருந்தால், அதுவொரு 6.7 இன்ச் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவாக இருக்கும். கண்டிப்பாக ஒன்பிளஸ் 12 போனிலும் நாம் 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டை (Refresh Rate) எதிர்பார்க்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, பேக் பேனலின் மேல் மையத்தில் வட்ட வடிவிலான கேமரா மாட்யூல் இடம்பெறலாம். அது 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 9 சீரிஸ் மெயின் கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா + 64 மெகாபிக்சல் ஓம்னிவிஷன் ஓவி64பி பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம்.
கடைசியாக இது 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். ஒப்பிடுகையில், ஒன்பிளஸ் 11 ஆனது 100W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் அதே 5,000mAh பேட்டரியை தான் கொண்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் விலை நிர்யணத்தை பொறுத்தவரை இது ரூ.60,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது!


Click it and Unblock the Notifications