அப்படி போடு.. OnePlus Nord 3 விலை இவ்ளோ கம்மியா? அப்போ எல்லோரும் வாங்குவாங்களே!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) மாடலானது, இன்னும் சில நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் விலை நிர்ணயம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமான வேகத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 2ஆர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (OnePlus Nord 2R TWS) அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாம் இங்கே, முதலில் வரும் நோர்ட் 3-யின் விலை மற்றும் அம்சங்களை பற்றி மட்டுமே விரிவாக பார்க்கவுள்ளோம்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஒரு லீக்ஸ் தகவலின்படி, இது வருகிற ஜூலை 5 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 என்ன விலைக்கு அறிமுகமாகும்? மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவ், ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் சாத்தியமான இந்திய விலை (Price in India) என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் ட்வீட் படி, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகவும்.
பேஸிக் வேரியண்ட் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும். இதன் விலை ரூ.32,999 ஆக இருக்கலாம். மறுகையில் உள்ள 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.36,999 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்வின் கூற்றுப்படி, இந்த விலைகள் 90% உறுதிசெய்யப்பட்ட விலைகளாகும்.
ஒன்பிளஸ் நோர்ட் 3-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் நோர்ட் 3 ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் ஏஸ் 2வி (OnePlus Nord Ace 2V) ஸ்மார்ட்போனின் "மறுபெயரிடப்பட்ட" மாடலாக இருக்குமென்று அதாவது ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது உண்மையாகும் பட்சத்தில் நோர்ட் 3 ஸ்மார்ட்போனானது 1.5 கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர்10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடனான 6.74-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 (MediaTek Dimensity 9000) சிப்செட்டை பேக் செய்யலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ் (OIS) ஆதரவுடனான 64எம்பி ஆம்னிவிஷன் சென்சார் + 8எம்பி சோனி IMX355 சென்சார் கொண்ட 120 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, இது 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம், கடைசியாக இது டால்பி அட்மோஸுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ போர்ட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவைகளையும் கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications