இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நூபியா Z11 ஸ்மார்ட்போனும் அதன் சிறப்புகளும்
நூபியா Z11 மற்றும் நூபியா N1, அமேசான் இ-காமர்ஸ் நிறுவனத்தில் ரூ.29,999 மற்றும் ரூ.11,999 விலையில் கிடைக்கின்றது.
நூபியா நிறுவனம் இந்தியாவில் இரண்டு நவீன ரக ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. நூபியா Z11 மற்றும் நூபியா N1 ஆகிய இரண்டு மாடல்களும் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனத்தில் ரூ.29,999 மற்றும் ரூ.11,999 விலையில் கிடைக்கின்றது.

புதிய பெயரில், புதிய நிறுவனம் தொடங்கியது - ப்ரீடம் 251.!
ஒன்ப்ளஸ் 3T மற்றும் ஹானர் 8 ஆகிய மாடல்களை ஒப்பிடும்போது நூபியா Z11 மாடலின் தரம் சிறப்பானது என்பதை ஏற்கனவே வேறு ஒரு கட்டுரையில் பார்த்தோம். 6 ஜிபி ரேம் உடல் பெஸல் லெஸ் டிஸ்ப்ளேதான் இதன் சிறப்பு என்பதும் தெரிந்ததே. இனி இந்த ஸ்மார்ட்போன் குறித்த சிறப்புகளை பார்ப்போம்

கண்களை கவரும் பெஸல் லெஸ் 5.5 இன்ச் டிஸ்ப்ளே:
நூபியா Z11 மாடல் ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் அளவில் பெஸல் இல்லாத டிஸ்ப்ளேதான் இதன் சிறப்பு அம்சம். 2.5D ஆர்க் எட்ஜ் கிளாஸ் உடன் அமைந்துள்ள டிஸ்ப்ளேவில் HD அம்சமும் உள்ளதால் கண்களை கவரும் வகையில் இதன் டிஸ்ப்ளே உள்ளது.
பெஸல் இல்லாத டிஸ்ப்ளே இருப்பதால் இதில் 1080P தரத்தில் வீடியோவை பார்க்கும்போது புதுவித அனுபவமாக இருக்கும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அசர வைக்கும் டிசைன்:
நூபியா Z11 மாடல் ஸ்மார்போன் அலுமினிய பாடியில் அசர வைக்கும் டிசைனில் தயாராகியுள்ளது. இதன் சைஸ் சரியான அளவான 5.5 இன்ச் அளவில் இருப்பதால் கைக்கு அடக்கமாக அதே நேரத்தில் ரிச்சாகவும் அமைந்துள்ளது.
மேலும் இதன் வெளிப்புற அமைப்பு சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய டிசைனுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்ட்வேர் தரம் எப்படி இருக்கும் தெரியுமா?
அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே இதன் ஹார்ட்வேர் தரம் மிகச்சிறந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நூபியா Z11 மாடல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 820 CPU உள்ளது. மேலும் 6 ஜிபி ரேம் இருப்பதால் ஒன்ப்ளஸ் உள்பட பிற மாடலுக்கு தகுந்த போட்டி ஸ்மார்ட்போனாக விளங்குகிறது. மேலும் 64 ஜிபி இண்டர்னல் மெமரியும் 200 ஜிபி வரை மைக்ரோ SD போட்டுக் கொள்ளும் வசதியும் இந்த மாடலில் இருப்பதால் நாம் கொடுக்கும் ரூ.30,000 மதிப்புக்கு சமமாகவே உள்ளது.

ஆண்ட்ராய்டின் அம்சங்கள் குறித்து பார்ப்போமா?
நூபியா Z11 மாடல் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மாலோ ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது. இதில் லேட்டஸ்ட்டாக அறிமுகமாகியுள்ள ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் இல்லை என்பது ஒரு குறையாக கருதப்படுகிறது. பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், சாஃப்ட்டாகவும் இருக்கும் என்று கூறப்படும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் குறித்து மேலும் விரிவாக வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்

கேமிரா தரம் குறித்து பார்ப்போமா?
நூபியா Z11 மாடல் ஸ்மார்ட்போனில் 16 எம்பி பின் கேமிரா உள்ளது. இதில் DSLR போட்டோகிராபி சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளதால் புகைப்படங்கள் நவீன தரத்துடன் இதில் கிடைக்கும்
மேலும் இந்த மாடலின் கேமிராவில் OIS, HIS, EIS ஆகிய அம்சங்கள் இருப்பதால் புரபொசனல் கேமிராவுக்கு இணையாக உள்ளது. இந்த கேமிராவின் மூலம் சில புகைப்படங்கள் எடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் வியக்கத்தக்க அளவில் இந்த மாடல் கேமிராவின் ரிசல்ட் இருந்ததை உணர முடிந்தது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications