புதிய பெயரில், புதிய நிறுவனம் தொடங்கியது - ப்ரீடம் 251.!

|

சமீபத்தில் தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்தில் காணாமல் போன ப்ரீடம் 251 நிறுவனமும், 2 லட்சம் ப்ரீ-ஆர்டர் கருவிகளும் என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது, அதனை தொடர்ந்து அந்நிறுவனம் 'ஷட் டவுன்' செய்யப்பட்டது என்ற கிளம்பிய செய்திகள் மூலம் பிரீடம் 25ஃ நிறுவனம் பற்றிய கேள்விகளுக்கு ஒரு முடிவாய் அமையும் என்று நம்பப்படும் இந்நிலையில் அந்நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் ப்ரீடம் 251 நிறுவனம் மூடப்பட்டது என்று கூறுவது பொய் என்று கூறியது மட்டுமில்லாது புதிய 'குண்டு' ஒன்றும் போட்டுள்ளார்.

அதாவது இன்னொரு நிறுவனம் கூட நாங்கள் ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் என்னென்ன கூறியுள்ளார், பிரீடம் 251 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் நிலை என்ன..? என்பதை பற்றிய தொகுப்பே இது.!

சந்தை மற்றும் இயக்கம்

சந்தை மற்றும் இயக்கம்

ரிங்கிங் பெல்ஸ் நிர்வாகி ஒருவர் அளித்த தகவலில் "சில தவறான அறிக்கைகள் ஊடகங்கள் வழியே ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மூடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சந்தை மற்றும் இயக்கம் ஆகியவைகளில் நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம்" என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதில் இருந்து ரிங்கிங் பெல்ஸ் இன்னொரு நிறுவனம் கூட ஆரம்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சட்ட சிக்கல்

சட்ட சிக்கல்

நொய்டாவை சார்ந்த இந்நிறுவனம் ரூ.251/-க்கு உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் வழங்கும் என்று கூறிய நாள் முதல் இன்றுவரையிலாக சர்ச்சைகளுக்கு இடையே தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள் ரூ.251/-க்கு ஸ்மார்ட்போன் பதிவுகள் நிகழ்த்திய பின்னர் நிறுவனம் பல சட்ட சிக்கல்களை சந்தித்தது.

எம்டிஎம் எலெக்ட்ரானிக் பிரைவேட் லிமிடெட்

எம்டிஎம் எலெக்ட்ரானிக் பிரைவேட் லிமிடெட்

இப்போது டெலிஅனலிசிஸ் (TeleAnalysis) என்றவொரு அறிக்கையின் படி, ரிங்கிங் பெல்ஸ் கம்பெனி மூடப்பட்டுவிட்டது மற்றும் ஒரு புதிய நிறுவனம் திறக்கப்பட்டுவிட்டது. அறிக்கையின்படி, அந்த புதிய நிறுவனத்தின் பெயர் எம்டிஎம் எலெக்ட்ரானிக் பிரைவேட் லிமிடெட் என்றும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் எம்.டி ஆக இருந்த மோஹித் கோயல் தான் இந்த புதிய நிறுவனத்தின் எம்.டி பதவியிலும் தொடர்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

தொலைபேசிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணு

தொலைபேசிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணு

மேலும் டெலிஅனலிசிஸ் அறிக்கையின்படி, எம்டிஎம் நிறுவனம் டிசம்பர் 7-ஆம் தேதி புது தில்லி கைலாஷ் காலனி என்ற பதிவின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தின் செயல்பாடுகள் அல்லது அதன் திட்டங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை என்றாலும் கூட அதன் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அது தொலைபேசிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணு சார்ந்த தொழில் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலைத்தளம் இயங்கவில்லை

வலைத்தளம் இயங்கவில்லை

மேற்கூறப்பட்டுள்ள தகவல்களை நிரூபிக்கும் வண்ணம் ஓரிரு நாட்களில் மிகவும் பிரபலமாகி க்ரஷ் ஆகும் நிலைக்கு சென்ற ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் வலைத்தளமும் இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்.?

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Freedom 251-maker Ringing Bells reportedly shuts down. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X