ப்ரோ 2025-ல் உங்ககிட்ட இதை தான் எதிர்பார்த்தோம்.. 3 புது Nothing போன்கள்.. மார்ச் 4-ஐ குறிவைத்த கார்ல் பெய்!!
கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டில் தனது "அறிமுக பாணி" மற்றும் "வியாபார உத்தி"யில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் கார்ல் பெய் தனது ஊழியர்களுக்கு "ஸ்பெஷல்" ஆக அனுப்பிய இமெயிலும் கூட அதையே தான் பிரதிபலிக்கிறது
தற்போது "அது எல்லாமே உண்மைதாங்க!" என்று கூறும்படியான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. "பவர் இன் பெர்ஸ்பெக்டிவ்" (Power in Perspective) என்கிற தலைப்பின் கீழ் நத்திங் நிறுவனம் தனது அடுத்த வெளியீட்டின் தேதியை அறிவித்துள்ளது. இந்நிகழ்வு 2025 மார்ச் 4 ஆம் தேதி (இந்திய நேரடிப்படி மதியம் 3:30 மணிக்கு) நடைபெற உள்ளது.

இந்த தேதி ஆனது 2025 மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2025) நிகழ்வுடன் ஒத்துப்போகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முக்கியமான விஷயம் இது அல்ல. மார்ச் 4 ஆம் தேதி அறிமுமாகும் நத்திங் ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்போன்களை பற்றியது தான்! எக்ஸ் தளம் வழியாக நத்திங் வெளியிட்டுள்ள டீஸர் வீடியோ வழியாக மார்ச் 4 ஆம் தேதி என்ன அறிமுகமாகும் என்கிற சரியான விவரங்கள் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.
இது வரவிருக்கும் ஸ்மாட்போனின் ரியர் கேமராவின் ஒரு வியூ-வை மட்டுமே வழங்குகிறது. மேலும் நத்திங் பிராண்டின் சிக்னேச்சர் ஆன கிளிஃப் இன்டர்பேஸையும் காட்டுகிறது. இதை வைத்து மார்ச் 4 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டில் புதிய நத்திங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்த முடியுமே தவிர, அது என்ன மாடல் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த இடத்தில் தான் சமீப காலமாக லீக்ஸ்களில் சிக்கிவரும் 3 நத்திங் ஸ்மார்ட்போன்கள் என்ட்ரி கொடுக்கின்றன.
அவைகள் - நத்திங் போன் 3 (Nothing Phone 3), நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3 ப்ரோ (Nothing Phone 3 Pro) ஸ்மார்ட்போன்கள் ஆகும். நத்திங் நிறுவனம் அதன் "பாரம்பரியமான" வருடாந்திர ஸ்மார்ட்போன் அப்டேட் சுழற்சியில் இருந்து விலகாமல் இருந்தால் மார்ச் 4 ஆம் தேதியன்று நத்திங் போன் 3 மாடல் தான் அறிமுகமாகும்.
ஒருவேளை நத்திங் நிறுவனம் அதன் அறிமுக பாணியில் சில மாற்றங்களை செய்ய விரும்பினால் மார்ச் 4 ஆம் தேதி அன்று நத்திங் போன் 3ஏ மாடல் அறிமுகமாகும். நத்திங் போன் 3 சீரிஸில் ப்ரோ மாடலும் இடம்பெறலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளதால், மார்ச் 4 ஆம் தேதியன்று நேரடியாக ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படலாம். அதை தொடர்ந்து மலிவு விலையிலான போன் 3 மற்றும் போன் 3ஏ மாடல்கள் வெளியாகலாம்.
நத்திங் போன் 3, நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஐபோனில் இருந்து ஈர்க்கப்பட்ட ஆக்ஷன் பட்டன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் பயனர்கள் ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்ய முடியும், செட்டிங்ஸ்-ஐ மாற்ற அல்லது ஆப்களை லான்ச் செய்ய முடியும்
அடுத்துவரும் நத்திங் போனில் ஆக்ஷன் பட்டன் இடம்பெறும் பட்சத்தில் யூசர் சென்ட்ரிக் டிசைன் மற்றும் புதுமையான செயல்பாட்டிற்காக நத்திங் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் நற்பெயர் கிடைக்கும். இதுதவிர்த்து நத்திங் போன் 3 மாடலில் 6.5-இன்ச் டிஸ்பிளேவைஇடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஸ்மார்ட்போனின் ப்ரோ வேரியண்ட் ஆனது, அதாவது நத்திங் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் (MediaTek Dimensity 9200 Plus) சிப்செட்டில் இயங்கலாம். இந்த சிப்செட்கள் சாத்தியமான மலிவுத்தன்மையையும், வலுவான மிட்ரேன்ஜ் ஃபோகஸையும் குறிக்கிறது.


Click it and Unblock the Notifications








